நவம்பர் 08, 2016 இரவு, மோடி பணமதிப்பிழப்பை அறிவித்தார். அறிவித்த நாள் முதல் நவம்பர் 25, 2016-ம் தேதி வரை 23 அரசு சேவைகளுக்கு பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்கள்.
அந்த 23 சேவைகளில் அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், விமான பயணச் சீட்டுகள், பால், மெட்ரோ ரயில், அரசுப் போக்குவரத்துப் பயணச் சீட்டுகள், ரயில் பயணச் சீட்டுகள் என சேவைகளின் பட்டியல் நீள்கிறது.
இதில் பெட்ரோல் பங்குகளில் தனியாரும் கை வைத்திருக்கும் இடம் என்பதால் இவர்களிடம் எத்தனை கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுக்கள் கொடுக்கப்பட்டது. அவர்கள் எவ்வளவு மதிப்பிலான ரூபாயை பழைய நோட்டுக்களாக நிர்வகித்தார்கள் என ஒருவர் ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
ஆர்டிஐ பதில்
இந்த ஆர்டிஐ பதிலில் "பெட்ரோல் பங்குகள் எவ்வளவு ரூபாய் வரையான பழைய நோட்டுக்களை கையாண்டார்கள் என்கிற கணக்கு மத்திய ரிசர்வ் வங்கி இடம் இல்லை. அதோடு மேலே சொன்ன 23 சேவைகளில் எவ்வளவு ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகள் புழங்கியது என்கிற தகவலும் ஆர்பிஐ-இடம் இல்லை. எனவே இனி இது போன்ற கேள்விகளை தயவு செய்து கேட்க வேண்டாம்" என வேண்டுகோள் உடன் பதில் அளித்திருக்கிறார்கள்.
ரத்து
நவம்பர் 25, 2016-க்குப் பிறகு மேலே சொன்ன 23 சேவைகளை 1000 ரூபாய் நோட்டுக்கள் நீங்கலாக பழைய 500 ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு மேற்கொள்ளலாம் எனச் சொன்னார்கள். ஆனால் அதுவும் டிசம்பர் 15, 2016 வரை மட்டுமே நீடித்தது.
அத்தனையும் போச்சு
டிசம்பர் 02, 2016-ம் தேதிக்குப் பின் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தி பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருளையோ, விமான பயணச் சீட்டுகளோ வாங்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்தது ஆர்பிஐ.
அந்த 99.3 %
இந்தியாவில் நடந்த பணமதிப்பிழப்பில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் 99.3 சதவிகித நோட்டுக்கள் மீண்டும் ஆர்பிஐ இடம் வந்து விட்டது. மீதமுள்ள 0.7 சதவிகிதம் தான் கறுப்புப் பணமாக இருக்கலாம் என ஒரு ஆரிக்கையே தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications