வட இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது...! ஒப்புக் கொண்ட அரசு

2014-ம் ஆண்டு முதல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் வழியாக 13.9 சதவீதம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு சொல்கிறது.

சமீபத்தில் ஆளும் மத்திய அரசால் எடுக்கப்பட்ட தொழிற்துறை ஆய்வுகளில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் மற்றும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளால் சிறு, குறு தொழில் துறையில் அதிக வேலை இழப்பு நிகழ்ந்ததாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாயின.

சவால்

சவால்

2018-ம் ஆண்டில் மட்டும் 1.30 கோடி பேர் வேலையிழந்ததாகவும், கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் மிக அதிகமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது இந்தப் புதிய தொழிற்துறை ஆய்வுகள் மூலம் கூடுதலாக வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஒரு எதிர்த் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதிகரித்துக் கொண்டிருக்கிறது

அதிகரித்துக் கொண்டிருக்கிறது

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) எடுத்த சர்வேயில், கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை எம்.எஸ்.எம்.இ துறையில் மட்டும் சுமார் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதன் மூலம் இத்துறையில் பணிபுரிவோரின் எண்ணிக்கை 3.32 லட்சம், பேராக உயர்ந்துள்ளதாம். ஆக எம்.எஸ்.எம்.இ துறையில் ஆண்டுக்கு 3.3% தொழிலாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சி கண்டிருக்கிறது.

1 லட்சம் நிறுவனங்கள்

1 லட்சம் நிறுவனங்கள்

இந்த ஆய்வு சுமார் 1.05 லட்சம் தொழில் நிறுவனங்களில் நடத்தப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் உள்ள 350 தொழில் மையங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாம். இதில் சிறு தொழில் நிறுவனங்கள் பெருமளவு வேலை வாய்ப்பை உருவாக்கியதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இத்துறை அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்பை தொடர்ந்து உருவாக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆண்டுக்கு 1.5 கோடி

ஆண்டுக்கு 1.5 கோடி

இப்போது டிசம்பர் 2018 கணக்குப் படி நாட்டில் இருக்கும் மொத்த வேலை வாய்ப்பு 45 கோடி என்றும் இதில் ஆண்டுதோறும் 1.3 கோடி வேலை வாய்ப்புகள் கூடுதலாக உருவாக்கப்படுவதாகவும் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா துறை

சுற்றுலா துறை

இதில் சுற்றுலாத் துறை அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்பை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜவுளி, ரெடிமேட் ஆடை போன்ற துறைகள் அபரிவிதமான வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இயந்திர உதிரி பாகம் மற்றும் போக்குவரத்து, சரக்குகளை கையாள்வது போன்றதுறைகளும் அதிக எண்ணிக் கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறைகளாக கண்ட றியப்பட்டுள்ளன.

இதிலும் வட இந்தியா..?

இதிலும் வட இந்தியா..?

மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், ஏற்றுமதி யில் மகாராஷ்டிரா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகியவை முன்னணியில் இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன.

வட்டிச் சலுகை

வட்டிச் சலுகை

இத்துறைக்கு 2% வட்டி சலுகை,பொருள் கொள்முதலில் இத்துறைக்கு சலுகை அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளால் இத் துறைஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.-பிடிஐ

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+