பெய்ஜிங்: நேற்று எத்தியோப்பியாவில் இருந்து பறக்கத் தொடங்கிய போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் விமானக் கோளாறு காரணமாக் கட்டுப்பாடு இழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
அந்த விமானத்தில் பயணித்த பயணிகள், விமான பணியாளர்கள் மற்றும் விமான ஓட்டிகள் உட்பட 157 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் இதே ரக விமானம் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து வெடித்துச் சிதறி 189 பேர் பலியானார்கள்.

இரண்டு முறையும் விமானம் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள் சிக்கியது கவனிக்கத்தக்கது. எத்தியோப்பியாவில் விமானம் விபத்துக்குள் சிக்குவதற்கு முன்னதாக விமானி விமானத்தை செலுத்த சிரமமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதனால் விமானத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்டிருக்கிறது. இது வெறும் விபத்துக்குள்ளான நாடுகள் மட்டும் அல்ல. இந்த ரக விமானங்களைப் பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தை கட்டமைப்பு மற்ரும் தொழில்நுட்பத்தை சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை சீன ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதித்து போயிங் நிறுவனத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது சீனா.
சீனாவில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இயக்க கூடாது என அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் அதிகார பூர்வமாகவே உத்தரவிட்டுள்ளார்களாம். போயிங் நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் எப்ஏஏவிடம் பேசி, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் தான் விமானத்தை மீண்டும் சீன ஏர்லைன் நிறுவனங்கள் இயக்க அனுமதி வழங்கப்படும் எனவும் கறாராக தெரிவித்துள்ளது சீனா விமான போக்குவரத்து அமைச்சகம்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications