இஸ்லாமாபாத்: பகிஸ்தானின் பிரதமர் மற்றும் முன்னாள் கிரிக்கேட் விளையாட்டு வீரர் இம்ரான் கானின் சொத்து மதிப்பு கடந்த டிசம்பர் 2017 நிலவரப்படி வெறும் 47 லட்சம் பாகிஸ்தானிய ரூபாய் தான் இருப்பதாக டான் (Dawn) என்கிற பத்திரிகை குறிப்பிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
2015-ம் ஆண்டு 3.56 கோடி பாகிஸ்தானிய ரூபாயாக இருந்த இம்ரான் கானின் சொத்து மதிப்பு அதற்கு அடுத்த ஆண்டு வெறும் 1.29 கோடி பாகிஸ்தானிய ரூபாயாக குறைந்தது. அதன் பின் 2017-ம் ஆண்டு மேலும் சரிந்து வெறும் 47 லட்சம் பாகிஸ்தானிய ரூபாயாக இருக்கிறதாம்.

2015-ம் ஆண்டில் இம்ரான் கான் தனக்கு சொந்தமான வீடுகளை விற்றதில் கிடைத்த லாபத்தாலும், வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தாலும் தான் 3.56 கோடி பாகிஸ்தானிய ரூபாயாக இருந்ததாம். அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் போதுமான வருமானம் இல்லாததால் மொத்த சொத்துக்கள் சரிந்து விட்டதாம்.
இம்ரான் கானுக்கு மாறாக எதிர்கட்சித் தலைவர் ஷாபாஷ் ஷரீப் ஒவ்வொரு ஆண்டும் தன் வருமானத்தைக் கூட்டிக் கொண்டே போவதையும் டான் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.
2015-ம் ஆண்டு ஷாபாஷ் ஷரீப்பின் சொத்து மதிப்பு 76 லட்சம் பாகிஸ்தானிய ரூபாயாக இருந்தது. ஆனால் 2017-ல் ஒரு கோடி பாகிஸ்தானிய ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
அவ்வளவு ஏன் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியின் விவசாய வருமானம் மட்டுமே 2015-ல் 10.5 கோடி பாகிஸ்தானிய ரூபாயாக இருந்ததாம். 2017-ல் ஆண்டில் இவரின் விவசாய வருமானம் மட்டும் 13.4 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இத்தனைக்கும் ஆசிஃப் அலி சர்தாரியிடம் 7,748 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறதாம்.
ஆசிஃப் அலி சர்தாரியை விட அவரின் மகன் பிலாவல் புட்டோ சர்தாரி இன்னும் அதிகப்படியான சொத்துக்களை வைத்திருப்பதாகவும் டான் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications