இந்தியாவை கோககோலாவின் டாப் 3 சந்தைகளில் ஒன்றாக மாற்றுவோம்..!

மும்பை: ஆகாஷ் அம்பானியின் திருமணத்துக்கு வந்திருந்த கோக கோல நிறுவன சிஇஓ ஜேம்ஸ் க்வின்சியிடம் கொடுத்த பேட்டியில் இருந்து சிலவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம்.

இந்த 2019-ம் ஆண்டுக்குள் இந்தியா கோககோலாவின் ஐந்தாவது பெரிய சந்தையாக உருவாகும். ஆனால் அடுத்த மூன்று வருடங்களுக்குள் இந்தியா கோக கோலாவின் டாப் 3 சந்தைகளில் ஒன்றாக இருக்கும் என சூழுரைக்கிறது கோக கோலா நிறுவனம்.

"தற்போது இந்தியா கோக கோலா நிறுவனத்தின் 6-வது பெரிய சந்தையாக இருக்கிறது. இன்னும் இந்தியாவில் பிடிக்க நிறைய இடங்களும், வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள்" என கோக கோலா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜேம்ஸ் க்வின்சி (James Quincy) சொல்லி இருக்கிறார்.

பழம் சார்ந்த பானங்கள்

பழம் சார்ந்த பானங்கள்

தற்போது இந்தியாவில் பழச் சாறுகள் சம்பந்தப்பட்ட பானங்கள் நன்றாக விற்பனை ஆகின்றன. அந்த துறையில் தான் கோக கோலாவும் இந்தியாவின் சந்தையைப் பிடிக்க இருக்கிறதாம்.

நீண்ட கால வளர்ச்சி

நீண்ட கால வளர்ச்சி

இந்தியாவைப் பொருத்த வரை ஒரு மந்தமான அல்லது நிலையான வளர்ச்சி கிடைக்கும் நாடு அல்ல. இந்தியாவில் இருக்கும் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் யார் அவர்களின் பொருட்களை மாற்றி தங்களைச் சரி செய்து கொள்கிறார்களோ அவர்கள் இந்திய வாடிக்கையாளர்களை வெல்வார்கள்.

கோக் டவுன்

கோக் டவுன்

இந்தியாவில், சில வருடங்கள் முன் வரை கோக கோலா நிறுவனத்திலேயே கோக் பானம் தான் அதிக வருமானத்தை கொடுக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் இப்போது பழச் சாறு சம்பந்தப்பட்ட பானங்களில் வாடிக்கையாளர்களின் கவனம் செல்லத் தொடங்கி இருக்கிறது. அதை சரி செய்யவும் கோக கோலா நடவடிக்கை எடுத்து வருகிறது.

வரி அதிகரிப்பு

வரி அதிகரிப்பு

அதோடு கோக கோலா நிறுவன தயாரிப்புகளின் விலையும் கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. காரணம் ட்ரம்ப் அரசாங்கம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியத்துக்கு அதிக வரி விதித்திருப்பது தானாம். இந்த கூடுதல் வரியை நேரடியாக மக்கள் மீதே விலையில் திணித்ததாலும் கோக்-ன் வியாபாரம் கொஞ்சம் டல்லடித்திருக்கிறதாம்.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

இந்தியாவில் கோக கோலாவின் பானங்களைத் தயாரிக்க ஜெயின் ஃபார்ம் ஃப்ரெஷ் ஃபுட்ஸ் போன்ற நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறதாம். ஆக இந்தியர்களின் சுவை உணர்ந்து இந்திய நிறுவனங்களை வைத்தே இந்திய சந்தையை பிடிப்பதாக நம்மிடமே சொல்கிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+