10 நாட்களில் 80 கோடி ரூபாய் காலி, மக்கள் பணத்தில் மோடிக்கு விளம்பரங்களா..?

ஆம் கடந்த 10 நாட்களில் மட்டும் மோடி அரசு தன் சாதனைகளை பத்திரிகைகளில் விளம்பரங்களாக கொடுத்து ஒரு சாரார் மக்களை வெறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது

கடந்த 10 நாட்களில் மட்டும் Times of india, Hindustan Times, Indian Express போன்ற முக்கிய ஆங்கிலப் பத்திரிகைகளில் 162 விளம்பரங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

10 நாட்களில் 80 கோடி ரூபாய் காலி, மக்கள் பணத்தில் மோடிக்கு விளம்பரங்களா..?

இந்த 162-ல் 93 விளம்பரங்கள் முழு பக்க விளம்பரங்களாம். ஒரு பக்கத்துக்கு சுமாராக 75 லட்சம் ரூபாய் வாங்குகிறார்களாம். அக சுமார் 80 கோடி ரூபாய் மக்கள் பணம் கடந்த 10 நாட்களில் மோடியின் தனி மனித துதி பாட செலவழிக்கப்பட்டிருக்கிறது என பலர் தங்கள் வெறுப்பை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் இன்று முதல் அரசு செலவில் எந்த ஒரு விளம்பரங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்கிற சட்டத்தால் மத்திய அரசு கொஞ்சம் விளம்பரங்களைக் கைவிட்டிருக்கிறது. இல்லை என்றால் இன்னும் எத்தனை கோடிகளுக்கு தங்கள் புகழை பாடி இருப்பார்கள் எனத் தெரியவில்லை.

துருவ் ராதே (Dhruv Rathee) என்பவர் டிவிட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோ பதிவைக் காண இங்கே க்ளிக்கவும் https://twitter.com/dhruv_rathee/status/1104316478378131456

இந்த வீடியோவில் ஒர் பிரபல ஆங்கில பத்திரிகையில் 9 -31-ம் பக்கம் வரை எல்லா பக்கத்திலும் மோடியின் முகம் இருக்கிறது எனவும் பதிவிட்டு தன் வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

இன்னொரு ட்விட்டர் வாசி சஷாங்க் ரஜக் (Shashank Rajak) "இதைப் பார்ப்பதற்கே வெறுப்பாக இறுக்கிறது, சொல்லப் போனால் தினசரிகளை படிப்பதற்கே கடுப்பாகிறது. இந்த முட்டாள் தனத்தை எல்லாம் செய்யட் தான் வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+