ஜியோ வந்தனால இப்ப என் சொத்த வித்து ஏர்டெல் கம்பெனிய நடத்துறேன்..! குமுறும் ஏர்டெல்

இந்தியாவின் டாப் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் இப்போது தன் செல்போன் டவர்களை நிர்வகித்து வரும் பார்தி இன்ஃப்ராடெல் நிறுவன பங்குகளை விற்று ஏர்டெல் டெலிகாம் நிறுவனத்தை நடத்துவதற்கு தேவையான காசை திரட்ட இருக்கிறது.

தற்போது பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனத்தில் 53.53 சதவிகித பங்குகளை மட்டுமே ஏர்டெல் வைத்திருக்கிறது. அதில் சுமார் 32 சதவிகித பங்குகளை நெட்டில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்கிற நிறுவனத்திடம் விற்க இருக்கிறது.

இந்த நெட்டில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் வாங்கும் ஏர்டெல் இன்ஃப்ராடெல்லின் பங்குகளை வேறு ஒரு தனியார் நிறுவனத்துக்கு விற்ரு நெட்டில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் காசு பார்க்கும்.

பார்தி இன்ஃப்ராடெல்

பார்தி இன்ஃப்ராடெல்

இப்படி பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் பங்குகளை நெட்டில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திடம் ஒரு பங்குக்கு 363 ரூபாய் என விற்று பணம் திரட்ட இருக்கிறார்கள். சுமார் 525 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏர்டெல் நிறுவன பங்குகளையும் சிங்கப்பூர் டெலிகம்யூனிகேஷன் என்கிற நிறுவனத்துக்கு விற்க இருக்கிறார்கள்.

முதலுக்கே கடன்

முதலுக்கே கடன்

இப்படி ஒட்டு மொத்தமாக 4.6 பில்லியன் டாலர் பணத்தை பங்குகளை விற்றும், கடன் பத்திரங்களை வெளியிட்டும் திரட்ட இருக்கிறார்கள். இதை எல்லாம் ஏர்டெல் நிறுவன அதிகாரிகள் வர்த்தத்தோடு செய்து வருகிறார்கள்.

வருத்தம்

வருத்தம்

செப்டம்பர் 2016-ல் ஜியோ என ஒரு கம்பெனி வந்ததால் இன்று இந்திய டெலிகாம் சந்தையில் ஒரு ரூபாய் கூட லாபம் பார்க்க முடியாமல் நஷ்டத்துக்கு நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எந்த நிறுவனத்திடமும் டெலிகாம் துறையில் முதலீடு செய்ய காசு இல்லை. இப்போது பாருங்கள் ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் லாபம் பார்த்துக் கொண்டிருந்த நாங்களே இப்போது மக்களிடம் கடன் வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம் என புலம்புகிறார்கள்.

தடுமாற்றம்

தடுமாற்றம்

ஆனால் ஜியோ வருவதற்கு முன் ஏர்டெல் சுமார் 7,780 கோடி ரூபாயை நிகர லாபமாகப் பார்த்தது. ஜியோ வந்த ஒரு வருடத்திலேயே நஷ்டம் 9,925 கோடியாக அதள பாதாளத்துக்கு இறங்கியது. கடந்த மார்ச் 2018-ல் தத்தித் தடுமாறி 79.20 கோடி ரூபாயாக கொஞ்சம் நிலை பெற்று இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+