இந்திய தொழிற்துறை உற்பத்தி ஜனவரி 2019-க்கு வெளியானது..!
டெல்லி: இந்திய தொழிற்துறை உற்பத்தி கடந்த ஜனவரி 2018-ஐ விட ஜனவரி 2019 காலத்தில் 1.7 சதவிகிதம் அதிகரித்து இருக்கலாம் என கணித்துச் சொல்லி இருக்கிறது புள்ளியியல் அமைச்சகம்.
இந்திய தொழிற்துறையின் முக்கிய துறைகளின் ஜனவரி 2019-க்கான கணிப்புகளைப் பார்ப்போம்

சுரங்கத் துறை 3.9%, உற்பத்தித் துறை 1.3%, மின்சாரத் துறை 0.8%, ஒட்டு மொத்தத்தில் 1.7%, முதன்மைப் பொருட்கள் 1.4%, மூலதனப் பொருட்கள் -3.2%, இடைநிலைப் பொருட்கள் -3.0%, கட்டுமானத் துறை பொருட்கள் 7.9%, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் 1.8%, கன்ஸ்யூமர் நான் டியூரபிள்ஸ் 3.8% என ஒருவாரு இறக்கம் கண்டிருக்கிறது.
கடந்த மாதத்தில் தான் ஆர்பிஐ இந்திய வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டித் தொகையை 0.25 சதவிகிதம் குறைத்துக் கொண்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் இந்தியத் தொழிற்துறை இறக்கம் கண்டிருப்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications