டெல்லி: 2019-ம் ஆண்டில் ஓயோ ஸ்டார்ட் அப் நிறுவனம் தன் விருந்தோம்பல் துறையில் மேலும் கொஞ்சம் முதலீடு செய்யப் போகிறதாம்.
தெற்காசியா நாடுகளில் மட்டும் 200 மில்லியன் டாலர் முதலீடு செய்யப் போகிறார்களாம். இந்த பணத்தை சொத்துக்களில் முதலீடு செய்வது, டெக்னாலஜியில் முதலீடு செய்வது மற்றும் நல்ல வேலை ஆட்களை பணிக்கு எடுப்பது போன்ற செலவுகளை மேற்கொள்ள இருக்கிறார்களாம்.
குறிப்பாக இந்தியாவில் முதலீடு செய்யப் போகிறார்களாம். இந்தியாவில் தற்போது 259 நகரங்களில் ஓயோ இருக்கிறது. இந்த 259 நகரங்களில் 8,700 கட்டடங்களில் 1,73,000 அறைகள் ஓயோவில் பார்த்து தேர்வு செய்ய முடியுமாம்.
உலக வரைபடத்தில்
உலக வரைபடத்தில் பார்த்தால் இந்தியா உட்பட நேபாளம், ஜப்பான் என 10 உலக நாடுகளில் ஓயோ செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் தான் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறதாம்.து.
அதிக மதிப்பீடு கொண்ட ஸ்டார்ட் அப்
இந்தியாவில் அதிக மதிப்பிடப்பட்ட ஸ்டார்ட் அப்களில் ஓயோவுக்கு இரண்டாவது இடம். முதல் இடத்தில் பேடிஎம் இருக்கிறது. பேடிஎம்மைத் தொடர்ந்து 5 பில்லியன் டாலர் மதிப்போடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது ஓயோ.
நஷ்டக் கணக்கு
கடந்த 2017 - 18 நிதியாண்டில் இந்த ஓயோ நிறுவனத்தின் நஷ்டம் சுமார் 20.3 சதவிகிதமாக இருந்ததாம். ஆனால் இந்த 2018 - 19 நிதியாண்டில் ஓயோ நிறுவனத்தி நஷ்டம் 10.4 சதவிகிதமாக குறையும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
சீன ஃபண்டிங்
சமீபத்தில் தான் ஓயோ சீனாவின் டிடி சுக்சிங் (Didi Chuxing) இடம் இருந்து 100 மில்லியன் டாலரை ஃபண்டிங்காக பெற்றது. 2018-ல் மட்டும் ஒரு பில்லியன் டாலர் வரை முதலீட்டைத் திரட்ட இருப்பதாகச் சொன்னது ஓயோ அதே போல் திரட்டி தன் விரிவாக்கப் பணிகளையும் செய்தது.
வாடிக்கையாளர் பாதுகாப்பு
இப்போது புதிதாக ஓயோ அப்ளிகேஷனின் "எஸ் ஓ எஸ்" ஆப்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறார்களாம். வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி ஓயோவுக்கும் அருகில் இருக்கும் காவல் துறையினருக்கு தெரிவிக்க முடியுமாம்.


Click it and Unblock the Notifications