டெல்லி: 2019 பிப்ரவரி மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Inflation) அனைத்து இந்திய சராசரி கணக்குகள் இன்று மார்ச் 12, 2019 மாலை வெளியானது. இனி வருவது எல்லாமே அனைத்து இந்திய சராசரிகள் தான். கடைசியில் தமிழகத்தின் விவரங்கள் தனியாக சொல்லி இருக்கிறோம்.
நுகர்வோர் பணவீக்கம் 2.57 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஜனவரி 2019-ல் நுகர்வோர் பணவீக்கம் 1.97 சதவிகிதமாக இருந்திருக்கிறது. பிப்ரவரி 2018 காலத்தில் நுகர்வோர் பணவீக்கம் 4.44 சதவிகிதமாக இருந்திருக்கிறது.

நுகர்வோர் உணவுப் பணவீக்கம் பிப்ரவரி 2019 காலத்துக்கு -0.66 சதவிகிதம் என கடந்த ஜனவரி 2019 காலத்தில் இருந்த -2.24 அளவை விட கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. பிப்ரவரி 2018 காலத்தில் நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 3.26 சதவிகிதமாக இருந்திருக்கிறது.
அனைத்து இந்திய மாநிலங்களிலும் சராசரியாக அடிப்படை பொருட்களின் விலைவாசி மாற்றம் பிப்ரவரி 2018 விலைக்கு ஒப்பிட்டு பிப்ரவரி 2019-க்கு மத்திய அரசு கணித்துக் கொடுத்திருக்கிறது
தானியங்கள் 1.32%
மீன் இறைச்சி 5.92%
முட்டை 0.86%
பால் 0.92%
எண்ணெய் & கொழுப்புகள் 1.41%
பழங்கள் -4.62%
காய்கறிகள் -7.69%
பருப்பு வகைகள் -3.82%
சர்க்கரை -6.92%
மசாலா பொருட்கள் 1.82%
எரிபொருள் 1.24%
மேலே சொன்னது அனைத்து இந்திய மாநிலங்களுக்கான சராசரி விவரங்கள் மற்றும் விலை வாசி. தமிழகத்துக்கு மட்டும் எனப் பார்த்தால் நுகர்வோர் பணவீக்கம் 3.17 சதவிகிதமாக இருக்கிறது. அனைத்து இந்திய சராசரியான 2.57 சதவிகிதத்தை விட கொஞம் அதிகம் தான்.
தமிழகத்தின் நகர் புறத்தில் நுகர்வோர் பணவீக்கம் 2.97 சதவிகிதமாகவும், தமிழக கிராம புறங்களில் நுகர்வோர் பணவீக்கம் 3.50 சதவிகிதமாகவும் இருக்கிறது.
இவைகள் எல்லாம் கணிப்புகள் தான் சரியான கணிப்புகள் அடுத்த மாதம் தான் வெளியாகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications