பிரிட்டன்: Europe Union என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் மார்ச் 29, 2019ம் தேதி அன்று பிரிட்டன் வெளியேற உள்ளது.
பிரெக்ஸிட் வெளியேற்ற ஒப்பந்தம் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.
இன்று பிரிட்டன் மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இரண்டாவது முறையாக பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக 391 எம்.பி.களும், ஆதரவாக 242 எம்.பி.களும் வாக்களித்திருக்கிறார்கள்.
கொஞ்சம் வரலாறு
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக, 2016 ஜூன் 23-ம் தேதி, பிரிட்டன் நாட்டு மக்களால் வாக்களிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
வெளியேற்ற ஒப்பந்தம்
வாக்கெடுப்பு நடந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து, வரும் 29ம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற (பிரெக்ஸிட்) உள்ளது. இந்த வெளியேற்றம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், பிரிட்டன் அரசு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் 2018ம் ஆண்டு நவம்பரில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அது தான் பிரெக்ஸிட் வெளியேற்ற ஒப்பந்தம்.
எதிரான வாக்குகள்
பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை அந்நாட்டு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இதுகுறித்து கடந்த ஜனவரி 15, 2019ம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒப்பந்தத்திற்கு எதிராக 432 எம்பிகளும், ஆதரவாக 202 எம்.பி.களும் வாக்களித்தனர்.
மாற்றம் தேவை
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் அந்நாட்டு மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டே இதற்கு காரணம். இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் சிறுசிறு மாற்றங்களுடன், இன்று நாடாளுமன்ற கீழ் சபையில் பிரதமர் தெரேசா மே தாக்கல் செய்தார்.
என்ன மாற்றம் வேண்டும்
இந்த முறையும் வாக்கெடுப்பு தெரசா மேவுக்கு எதிராகவே அமைந்திருக்கிறது. இன்னும் பிரிட்டனுக்கு சாதகமான விஷயங்கள் நடக்க வேண்டும் என உறுப்பினர்கள் தெரசா மேவிடம் கேட்டிருக்கிறார்களாம். தெரசா மேவோ இன்னும் என்ன தான் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என ஓப்பனாகவே உறுப்பினர்களிடம் கேட்டு வருகிறார்களாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications