ஆயுத இறக்குமதியில் 2ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்ட இந்தியா - காரணம் தெரியுமா
ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக SIPRI அறிக்கை தெரிவித்துள்ளது.
டெல்லி: சர்வதேச அளவில் ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 9.5 சதவிகிதத்துடன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 12 சதவிகிதத்துடன் சௌமுதல் இடத்தில் உள்ளது.
முன்னதாக 2013-2017ஆம் ஆண்டுகளில் 13 சதவிகிதத்துடன் முதல் இடத்தில் இருந்து வந்த இந்தியா 8 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் ஆயுத இறக்குமதி செய்வதில் 2009-2013ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2014-2018ஆம் ஆண்டுகளில் 39 சதவிகிதம் சரிந்துள்ளது.
முறையான உரிமம் பெற்ற ஆயுத உற்பத்தியாளர்களிடம் இருந்து போர் விமானங்களை வாங்குவதில் ஏற்பட்ட கால தாமதமே இந்தியா 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக SIPRI அறிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications