2019 மக்களவைத் தேர்தலுக்கு 50,000 கோடி செலவாகும்..! செல்வச் செழிப்பில் அரசியல் கட்சிகள்..!

டெல்லி: இந்தியாவில் 1,866 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அதில் 56 அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில அரசியல் கட்சிகளாக இயங்கி வருகின்றன.

தேர்தலுக்காகத் தான் அரசியலில் சம்பாதித்த திருட்டுப் பணத்தை முதலில் பதுக்கி வைக்கிறார்கள். அந்த பதுக்கிய பணத்தை முதலீடு செய்து தான் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கிறார்கள். மீண்டும் சுரண்டுகிறார்கள்.

இந்த தேர்தல் நேரங்களில் தான் கணக்கில் வராத பணம், கணக்கில் வந்த பணம், கறுப்பு பணம், என சட்டத்துக்கு விரோதமான முறையில் சம்பாதித்த பணம் அனைத்தும் வெளியே வரும்.

என்ன சொல்கிறது

என்ன சொல்கிறது

கடந்த 2014-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான (Centre for Media Studies) பத்திரிகை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வரைமுறைகள்

வரைமுறைகள்

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.70 லட்சமும், சிறிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.54 லட்சமும் செலவிடலாம் என தேர்தல் ஆணையம் ஒரு வரைமுறை வகுத்தது. 2014 மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளில் மொத்தம் 8,251 வேட்பாளர் போட்டி இட்டார்கள். ஆக மேலே சொன்ன கணக்குப் படி ஒரு வேட்பாளருக்கு அதிகபட்ச தொகையான 70 லட்சத்தை வைத்து கணக்கிட்டால் கூட 5,775 கோடி ரூபாய் தான் வருகிறது. ஒரு ரவுண்ட் ஆஃப் கணக்காக 6,000 கோடி ரூபாய் வைத்துக் கொள்ளலாம்.

இவ்வளவு செலவுகளா..?

இவ்வளவு செலவுகளா..?

ஆனால் எப்படி 35,000 கோடி ரூபாய் வரை செலவழித்தார்கள்..? இதில் தேர்தல் ஆணையம் சொன்ன 6,000 கோடி ரூபாய் போக மீதமுள்ள 29,000 கோடி ரூபாய்க்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் பதில் சொல்லவில்லை. ஆக ஒரு வாக்காளருக்கு இந்தியாவில் சராசரியாக 500 - 560 ரூபாய் வரை செலவழிக்கிறது இந்திய அரசியல் கட்சிகள். ஒரு நாளில் ஒரு தனி மனிதன் (குடும்பம் அல்ல) 200 ரூபாய்க்குள் வாழ்ந்து விடும் ஏழை எளிய மக்கள், கார்ப்பரேட் அடிமைகள், தினக் கூலிகள் அதிகம் வாழும் நாடும் அதே இந்தியா தான்.

2019-ல்

2019-ல்

2014 மக்களவை தேர்தலுக்கு 35,000 கோடி ரூபாய் என்றால், இந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு சுமாராக 50 ஆயிரம் கோடி முதல் 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை மக்களிடம் இருந்து திருடிய பணத்தை அரசியல் கட்சிகள் வாரி இறைக்க உள்ளதாக கணித்திருக்கிறதது Centre for Media Studies.

அமெரிக்காவே இவ்வளவு தான்

அமெரிக்காவே இவ்வளவு தான்

உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் 2016 அதிபர் தேர்தலுக்கு அந்த நாட்டில் செலவழித்த தொகை வெறும் 6.5 பில்லியன் டாலர் என opensecrets.org என்கிற வலைதளம் சொல்கிறது. இந்திய ரூபாயில் 45000 கோடி ரூபாய். ஆனால் இந்தியாவோ அவர்களை விட சுமார் 30 சதவிகிதம் கூடுதலாக செலவு செய்கிறார்கள் நம்மூர் அரசியல் வாதிகள். இப்போது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா..?

என்ன செலவு செய்வார்கள்..?

என்ன செலவு செய்வார்கள்..?

2014-ல் வெறும் 250 கோடி ரூபாய் தான் சமூக வலைதளங்களில் விளம்பரங்களுக்காக செலவழித்தார்கள் அரசியல் கட்சிகள். 2019 இந்த செலவு மட்டும் சுமார் 5000 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அதே போல் சொகுசு கார்களில் பயணித்துக் கொண்டிருந்த தலைவர்கள் இப்போது அதிகம் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அதோடு தொண்டர்களுக்கான போக்குவரத்து செலவுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சொல்கிறார் பாஸ்கர் ராவ். இவர் தான் Centre for Media Studies-ன் தலைவர். குறிப்பு: குவார்ட்டர், கோழி பிரியாணிக்கான செலவுகள் இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இவ்வளவு தானா..?

இவ்வளவு தானா..?

2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சராசரியாக 25 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்ததாகச் சொல்கிறது தேர்தல் ஆணையம். அதாவது 5775 கோடி செலவு செய்ய வேண்டிய இடத்தில் வெறும் 2062 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்தார்களாம்.

கொஞ்சம் அதிகம்

கொஞ்சம் அதிகம்

அறிவிக்கப்பட்ட தொகையை விட 10 எம்.பி.க்கள் அதிகமாக செலவு செய்ததாக குறிப்பிட்டு உள்ளனர். பாரதீய ஜனதாவில் 4 எம்பிக்களும், திரிணாமுல் காங்கிரசில் 2 எம்பிக்களும், காங்கிரஸ், இந்திய தேசியவாத காங்கிரஸ், யூனியன் முஸ்லீம் லீக், அதிமுக ஆகிய கட்சிகளில் தலா ஒரு எம்.பி.யும் அதிகமாக செலவு செய்ததாக குறிப்பிட்டு உள்ளனர்.

என்ன சராசரி

என்ன சராசரி

20 அல்லது அதற்கு மேற்பட்ட பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலங்களில் எவ்வளவு தேர்தல் செலவீனங்கள் செய்கிறார்கள்...? கேரளாவின் சராசரியாக ஒரு மக்களவைத் தேர்தல் வேட்பாளர் ரூ.52,09,040 செலவழிக்கிறார். இதுவே ராஜஸ்தானில் ரூ. 47,89,702, மகாராஷ்டிராவில் ரூ. 46,93,421, குஜராதில் ரூ. 45,91,757, மேற்கு வங்கத்தில் ரூ. 44,05,462 செலவழிக்கிறார்கள்.

இவ்வளவு செலவாகும்

இவ்வளவு செலவாகும்

Centre for Media Studies-ன் ஆய்வுகள் அடிப்படையில், சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சராசரியாக 1.5 - 2.0 கோடி ரூபாய் வரை செலவழிக்கிறார்களாம். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் சராசரியாக 6.5 - 6.9 கோடி ரூபாய் வரை செலவழிக்கிறார்களாம்.

2019 மக்களவைத் தேர்தலுக்கு 50,000 கோடி செலவாகும்..! செல்வச் செழிப்பில் அரசியல் கட்சிகள்..!

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+