3.15 கோடி ரூபாய் பணம் வேண்டுமா..? உங்கள் இடது கையை வெட்டிக் கொள்ளுங்கள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

LJUBLJANA: ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்று ஸ்லோவேனியா. ஸ்லோவேனியாவின் தலை நகரான LJUBLJANA-வைச் சேர்ந்த 26 வயது பெண் தன் கையை தானே அறுத்துக் கொண்டு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கேட்டிருக்கிறாள்.

தன் தோட்டத்தில் இருக்கும் தேவையற்ற மரங்களை மின் ரம்பத்தால் வெட்டும் போது, எதிர்பாராமல் தன் கை துண்டானதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் பார்வை இட்ட மருத்துவர்கள் உண்மையாகவே தெரியாமல் தன் கையை வெட்டிக் கொண்டாள் என நம்பிவிட்டார்கள்.

3.15 கோடி ரூபாய் பணம் வேண்டுமா..? உங்கள் இடது கையை வெட்டிக் கொள்ளுங்கள்..!

உடனடியாக சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் சொல்லி அனுப்பிவிட்டார்கள். ஒரு பக்கம் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, அவரது உடலில் மீண்டும் கையை பொருத்திவிட்டார்கள்.

இதற்கிடையில் இந்த சம்பவம் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கொடுப்பதற்காக விசாரணை நடத்திய போது, 3.15 கோடி ரூபாய் இன்ஷூரன்ஸ் பணத்துக்காக தன் கையை தானே வெட்டிக் கொண்டாள் என்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள் LJUBLJANA காவல் துறையினர்.

3.15 கோடி ரூபாய் பணம் வேண்டுமா..? உங்கள் இடது கையை வெட்டிக் கொள்ளுங்கள்..!

இன்ஷூரன்ஸ் பாலிசி திட்டங்கள் படி இந்த பெண்ணுக்கு விபத்தில் உறுப்புகளை நிரந்தரமாக இழந்தால் 3.15 கோடி ரூபாயை க்ளெய்ம் தொகையாக கொடுப்பார்களாம். இறந்துவிட்டால் சம்பந்தப்பட்ட நாமினிகளுக்கு 10 கோடி ரூபாய் கொடுப்பார்களாம்.

இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை ஏமாற்ற நினைத்த குற்றத்துக்காக தன் கையை தானே வெட்டிக் கொண்ட அந்த பெண்ணையும், அவரது உறவினர் ஒருவரையும் போலீசார் கைது செய்து முழு விசாரணை நடத்தி வருகிறார்களாம். ஸ்லொவேனிய நீதிமன்றத்தில் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும், பித்தலாட்டங்களும் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 8 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: insurance claim fraud
English summary

Slovenian women cut her own hand to get 3 crore insurance claim

slovenian women cut her own hands to get 3 crore insurance claim
Story first published: Wednesday, March 13, 2019, 18:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X