வாசிங்டன்: இந்தியாவில் இன்னும் 6 அமெரிக்க அணுமின் நிலையங்களை அமெரிக்காவின் உதவியோடே அமைப்பதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இது குறித்து இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்தியா சார்பாக வெளி உறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே பேசினார். அமெரிக்கா சார்பாக அமெரிக்க ஆயுத கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரியா தாம்சன் பேசினார்.
இரண்டு நாட்களாக வாசிங்டனில் அடுத்தடுத்த நடந்த பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, இந்த ஒப்பந்த முடிவுக்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். இந்தோ அமெரிக்க நாடுகளுக்கு இடையில் ஸ்ட்ராட்டஜிக் செக்யூரிட்டி பேச்சுவார்த்தை (Strategic Security Conversation) நடக்கும். அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து Strategic Security Conversation-ல் ஈடுபடுவது இது 9-வது முறை.
எண்ணெய் இறக்குமதி நாடுகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பு "இந்தியா போன்ற மிகப் பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு இன்னும் அதிக அணு மின் நிலையங்களை விற்க ஆவலாக இருப்பதாகவும், அதற்கான வாய்ப்புகளை தேடிக் கொண்டிருப்பதாகவும்" சொல்லி இருக்கிறார்.
ஒத்துழைப்பு ஒப்பந்தம்
இந்த அணுமின் நிலையம் மட்டும் இன்றி பாதுகாப்பு மற்றும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு போன்ற விஷயங்களிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுவதாகவும் கூட்டறிக்கையில் இந்தியாவும் அமெரிக்காவும் தெரிவித்திருக்கிறார்கள்.
விபத்துப் பொறுப்பு
பொதுவாக இந்தியாவில் அணு உலை விபத்து ஏற்பட்டால், அணு உலை தயாரித்தவர்களையே பொறுப்பேற்கச் சொல்லும். அதனால் தான் அமெரிக்கா இத்தனை நாட்களாக தன் அணு மின் நிலையங்களைக் இந்தியாவுக்கு விற்கவில்லை. இப்போது அணு உலைகளை விற்கும் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ளத் தயாரான நிலையில் மீண்டும் இந்தியா அமெரிக்காவோடு அணு மின் நிலையங்களை வாங்க தயாராகி இருக்கிறதாம்.
2024-ல்
வரும் 2024-க்குள் இந்தியா தன் அணு மின் நிலையங்களை மூன்ரு மடங்கு அதிகரிக்க இருக்கிறது. சமீபத்தில் தான் ரஷ்யாவோடும் 6 அணு மின் நிலையங்களை அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications