என் கணவர் என்ன தொழில் பண்றார்னு எனக்கு தெரியாது - சாந்தா கோச்சர்

தன் கணவரின் தொழில் பரிவர்த்தனை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சந்தா கோச்சார் அமலாக்கத் துறையின் விசாரணையின் போது விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி: தன்னுடைய கணவர் நடத்தும் தொழில் பற்றியும், அவருடைய பணப் பரிவர்த்தனைகளைப் பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது என்று அமலாக்கத் துறையின் விசாரணையின் போது ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சந்தா கோச்சார் பதில் அளித்துள்ளார்.

தன் கணவரின் தொழில் கூட்டாளியான வேணுகோபாலின் வீடியோகான் நிறுவனத்திற்கு தகுதியின் அடிப்படையில் தான் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் கடன் வழங்கும் பரிசீலனைக் குழு ஆராய்ந்து பரிசீலித்த பின்பே அந்நிறுவனத்திற்கு கடன் வழங்கியதாக சந்தா கோச்சார் பதிலளித்தார்.

முன்னதாக அமலாக்கத்துறையின் விசாரணை அதிகாரிகள் வீடியோகான் நிறுவன தலைவர் வேணுகோபால் தூத்திடமும், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரிடமும் இதே கேள்வியை முன்வைத்தனர். அதற்கு தீபக் கோச்சார் தன்னுடைய தொழில் பரிவர்த்தனைகளை தன் மனைவியிடம் கூறுவது இல்லை என்றே பதில் கூறியிருந்தார்.

ரூ.300 கோடி கடன்

ரூ.300 கோடி கடன்

சந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ வாக பதவி வகித்த காலத்தில் தன் கணவர் தீபக் கோச்சாரின் தொழில் கூட்டாளியான வேணுகோபால் தூத்தின் வீடியோகான் நிறுவனத்துக்கு எந்த விதமான

நிபந்தனையும் இல்லாமல் ரூ. 300 கோடி கடன் வழங்கப்பட்டது. அதற்கு கைமாறாக சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நியூபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனத்துக்கு ரூ.64 கோடி வீடியோகான் வழங்கியது. இந்தத் தொகையானது வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதற்காக சந்தா கோச்சாருக்கு அளிக்கப்பட்ட லஞ்சத் தொகை என சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

 

 எனக்கு எதுவும் தெரியாது

எனக்கு எதுவும் தெரியாது

சிபிஐ வழக்கு பதிவு செய்ததை அடுத்து, இந்தப் பரிவர்த்தனை தொர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறையினர் விசாரித்த போது, ஐசிஐசிஐ வங்கி சார்ந்த விஷயங்கள் எதையும் தான் ஒருபோதும் தனது கணவரிடம் விவாதித்தது கிடையாது என்று சந்தா கோச்சார் கூறியுள்ளார் (பொண்ணை எப்படி பொத்தி பொத்ரி வளத்திருக்காங்க). மேலும் ஐசிஐசிஐ வங்கி மூலம் கடன் கொடுத்ததற்காக தான் எந்தவித பிரதிபலனையும் ஒரு போதும் பெற்றது கிடையாது என்றும் கூறியுள்ளார்.

ரூ.1875 கோடி கடன்

ரூ.1875 கோடி கடன்

அமலாக்கத்துறையினரின் விசாரணையில், வீடியோகான் நிறுவனத்துக்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கடன் வழங்கப்பட்டது என்றும் சந்தா கோச்சார் தெரிவித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டு வரையான காலத்தில் வீடியோகான் நிறுவனத்துக்கு சுமார் ரூ.1,875 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் வழங்குவதை பரிசீலிக்கும் குழு உரிய வகையில் பரிசீலித்த பிறகே கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

இதுதான் பதில்

இதுதான் பதில்

அமலாக்கத்துறையினர் சந்தா கோச்சாரிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பே வீடியோகான் நிறுவன தலைவர் வேணுகோபால் தூத்திடமும், சந்தா கோச்சாரின் கணவன் தீபக் கோச்சாரிடமும் இதே முன்வைத்தனர். அதற்கு தீபக் கோச்சார் ஏற்கனவே சொல்லி வைத்தது போல், தான் ஒருபோதும் தன்னுடைய தொழில் பரிவர்த்தனைகளைப் பற்றி தன்னுடைய மனைவியிடம் விவாதித்தது என பதிலளித்துள்ளார்.

பணம் வந்த பாதை

பணம் வந்த பாதை

தீபக் கோச்சார் நடத்தும் நியூபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட தொகையானது வேணுகோபால் தூத் மூலமாக மொரீஷியஸ் வழியாக முதலீடு செய்வதைப் போல் வந்துள்ளது. இந்த குறித்து மொரீஷியஸுக்கு விவரம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வெட்டவெளிச்சமாக்கும் ஆதாரங்கள்

வெட்டவெளிச்சமாக்கும் ஆதாரங்கள்

கடன் வழங்கப்பட்டது தொடர்பான இணையதள தகவல் மற்றும் ஆவணங்களை அமலாக்கத் துறை தேடி வருகிறது. அதன்மூலம்தான் வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதில் சந்தா இருந்த உள் நோக்கத்தை நிரூபிக்க முடியும் அமலாக்கத்துறையும் சிபிஐ(CBI)யும் கருதுகின்றன. இப்போது உள்ள ஆதாரங்கள் மூலம் தீபக் கோச்சார் மற்றும் வேணுகோபால் தூத் ஆகியோருக்கு இடையில் உள்ள உறவை வெளிப்படுத்த போதுமானது.

எதேச்கையான நிகழ்வுதான்

எதேச்கையான நிகழ்வுதான்

தீபக் கோச்சாரிடம் விசாரித்தபோது, தான் ஒருபோதும் வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கும்படி தனது மனைவியிடம் கூறியது கிடையாது என்று தெரிவித்துள்ளார். ஐசிஐசிஐ வங்கி கடன் வழங்கியதும், அதே சமயத்தில் தனது நிறுவனத்தில் வீடியோகான் முதலீடு செய்ததும் எதேச்சையான நிகழ்வு என்றும் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+