இனி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தற்காலிகமாக விற்கப்படாது..! போயிங் அதிரடி முடிவு..!

வாசிடன்: 5 மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விபத்துக்கு உள்ளாகி வெடித்துச் சிதறியது. அதில் 189 பேர் பலியானார்கள்.

எத்தியோப்பியாவில் கடந்த மார்ச் 10, 2019 அன்று போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி 157 பேர் உயிரிழந்தனர்.

இந்த தொடர்ச்சிக்குப் பின் ஒவ்வொரு நாடாக முன் வந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை பயன்படுத்தத் தடை விதித்து வருகிறது. சீனா, எத்தியோப்பியா, இந்தியா, கேமன் தீவுகள், அர்ஜெண்டினா, மெக்ஸிகோ என நாடுகள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதுவரை போயிங் நிறுவனத்துக்கு ஆதரவு தந்து வந்த அமெரிக்காவும் நேற்று போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு தடை விதித்தது.

வியாபாரம்

வியாபாரம்

மொத்த போயிங் ரக விமானங்களிலேயே நிறுவனத்துக்கு அதிக லாபம் கொண்டு வருவது இந்த 737 மேக்ஸ் 8 ரக விமானம் தான். போயிங்கின் மொத்த வருவாயில் 40 சதவிகிதம் இந்த ஒரு ரக விமானத்தை நம்பித் தான் இருக்கிறது. 2017 மே மாதத்தில் விமான சேவை நிறுவனங்களுக்கு விற்கத் தொடங்கிய இந்த ரக விமானத்தைக் குறுகிய காலத்திலேயே (இரண்டு வருடத்துக்குள் 2017 - 2019) 350-க்கும் மேற்பட்ட விமானங்களை டெலிவரி கொடுத்திருக்கிறார்களாம். இன்னும் 5000 விமானங்களை ஆர்டர் வேறு எடுத்திருக்கிறார்களாம்.

எதிர்கால வியாபாரம்

எதிர்கால வியாபாரம்

போயிங் நிறுவனத்தின் கையிலிருக்கும் மொத்த ஆர்டர்களில் 65 சதவிகித ஆர்டர்கள் இந்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் மட்டும் தான். ஆக இந்த விமானம் சார்ந்த நெகட்டிவ் செய்திகள், தங்கள் எதிர்கால வியாபாரத்தை முழுமையாக பாதிக்கும் என பயந்து போய் இருக்கிறது போயிங்.

737 மேக்ஸ் 8-ஐ நம்பி

737 மேக்ஸ் 8-ஐ நம்பி

போயிங் நிறுவனத்தின் வருவாய் கடந்த 2018-ம் ஆண்டில் 101 பில்லியன் டாலர். அதில் 40 சதவிகித வருவாய் இந்த ஒரே ஒரு ரக விமானத்தில் இருந்து தான் வந்தது. இதை இந்திய ரூபாயில் மதிப்பிட்டால் போயிங் நிறுவனத்தின் மொத்த வருவாய் சுமார் 7.10 லட்சம் கோடி ரூபாய். அதில் 40% என்பது சுமார் 2.84 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த ஒரு வருடம் மட்டும் இல்லை. அதற்கு முந்தைய சில ஆண்டுகளிலும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் ஒரு பெரிய அளவிலான வருவாய்க்கு காரணமாக இருந்திருக்கிறது.

போயிங் பதற்றம்

போயிங் பதற்றம்

இப்படி தன் நிறுவனத்தின் பெரிய வருவாய் சோர்ஸிலேயே கை வைத்துவிட்டார்களே என கவலையில் ஆழ்ந்திருக்கிறது போயிங். இருப்பினும் தன் எதிர்கால ஆர்டர்கள் பாதிக்காத வகையில், தன் பெயர் கெட்டு விடாத வகையில் எதையாவது செய்து தன் வியாபாரத்தை, குறிப்பாக போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தை மீண்டும் விற்க அமெரிக்காவின் Federal Aviation Administration இடம் சான்று வாங்க தவித்துக் கொண்டிருக்கிறது.

அதிகரிக்கும் பிரச்னை

அதிகரிக்கும் பிரச்னை

முதலில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதிக்கத் தொடங்கியது சீனா தான். அவர்களைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடாக இந்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதித்து வருவது போயிங் நிறுவனத்தின் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
என போயிங் நிறுவனமே முன் வந்து ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.

நிறுத்திய போயிங்

நிறுத்திய போயிங்

இப்போது 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் வியாபாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்போவதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் முழுமையாக சரி செய்த பின், முறையான பாதுகாப்பு சான்றிதழ்களை எல்லாம் வாங்கிய பின் தான் சந்தைக்கு கொண்டு வரப் படுமாம். இந்த பிரச்சினைகளுக்கு ஒரு சரியான பாதுகாப்புத் தீர்வு கிடைக்கும் வரை 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் யாருக்கும் விற்கப் போவதில்லையாம். அதோடு புதிய ஆர்டர்களும் வாங்கப்படாது என போயிங் நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+