அமெரிக்கா: எலான் மஸ்க் என்றாலே அதிரடி தான். கடந்த 2018 ஜூன் - ஜூலை மாதத்தில் தான் இந்தியாவில் புதிய கார் உற்பத்தியாளர்களுக்கு சாதகமான கொள்கை முடிவுகள் இல்லை என குற்றம்சாட்டினார். அதோடு இந்திய அரசு ஏதோ வேண்டும் என்றே டெஸ்லாவின் வருகையை தாமதப்படுத்துவது போல ஒரு பிம்பத்தை உருவாக்குகினார்.
ஆனால் இன்று 2019-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் கால் எடுத்து வைக்கப் போவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் செய்தியைப் பகிர்ந்திருக்கிறார். ஆக இந்த பில்லியனர் பிசினஸ் மேன் தன் டெஸ்லா கார் உற்பத்தி ஆலையை இந்தியாவில் தொடங்கும் திட்டத்தை மீண்டும் பச்சைக் கொடி அசைத்திருக்கிறார்.
இந்திய அரசும் டெஸ்லா இந்தியாவுக்கு வர வேண்டும் என்றே ஆதரித்து வந்தது. டெஸ்லா இந்தியா வர தன்னால் ஆன எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வந்தது. ஆனால் டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க் தன் கோபத்தை வெளிப்படுத்திவிட்டார்.
இந்திய அரசு தரப்பு
அதன் பின்பு கூட டெஸ்லா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு செலுத்த வேண்டிய இறக்குமதி வரிகளை தற்காலிகமாக தள்ளுஅப்டி செய்தது இந்திய அரசு. இந்த சலுகையை டெஸ்லா இந்தியாவில் தன் உற்பத்தி ஆலையை முழுமையாக தொடங்கும் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் வழிகாட்டியது இந்திய அரசு.
முதல் ஆலை
இதெல்லாம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க கடந்த ஜனவரி 2019-ல் டெஸ்லா சீனாவில் தன் உற்பத்தி ஆலையை நிறுவத் தொடங்கி இருக்கிறார். ஐந்து பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த டெஸ்லா ஆலை தான் அமெரிக்காவுக்கு வெளியே அமைத்த முதல் டெஸ்லா ஆலை.
ஏன் இந்தியா
இந்தியாவில் இப்போது வரை மின்சார கார்கள் வியாபாரம் சூடு பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் மின்சார வாகனங்கள் ஜோராக வியாபாரம் ஆகிறது. சீனாவில் ஆண்டுக்கு 13.5 லட்சம் மின்சார கார்கள் வியாபாரம் ஆகிறதாம். ஆனால் இந்தியாவில் நேர் மாறாக ஆண்டுக்கு 6000 வாகனங்கள் விற்பனை ஆனால் பெரிய விஷயமாம்.
கணிப்பு
இன்று வரை இந்தியாவில் மொத்தமே 6000 மின்சார கார்கள் இந்திய சாலைகளில் இருக்கலாம் என ப்ளூம்பெர்க் தன் கணிப்பையும் சொல்கிறது. இந்தியாவில் மின்சார கார்களை சார்ஜ் செய்து கொள்ள இதுவரை இந்தியாவில் வெறும் 425 சார்ஜிங் பாயிண்டுகள் மட்டுமே இருக்கிறதாம். ஆனால் வரும் 2022-க்குள் இந்தியாவில் 2800 சார்ஜிங் பாயிண்டுகளாக அதிகரிக்கலாம் என கணித்திருக்கிறது ப்ளூம்பெர்க். எல்லா கணிப்புகளையும் தவிடு பொடி யாக்க டெஸ்லா இந்தியாவில் நுழையவிருக்கிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications