மும்பை: ஹிந்துஸ்தான் யுனிலிவர். இந்தியாவின் FMCG - Fast Moving Consumer Goods -துறையில் வியாபாரம் செய்யும் நிறுவனம். துணிகளைத் துவைக்க பயனப்டுத்துக்கு Rin, surf Excel, தொடங்கி சாப்பிடும் Knorr, kissaan, bru, lipton, broke bond வரை பல பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனம். பல நாடுகளில் வியாபாரம் பார்த்து வருவதால் இந்த நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் உள்ளே புகுவதும் கொஞ்சம் கடினம். அப்படிப் பட்ட நிறுவனத்தின் 11 தலைவர்களில் மூன்று பேர் இந்தியர்கள்.
அந்த 11 பேர், ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் அனைத்து முக்கிய தலைவர்கள் சேர்ந்து பேசும் அமைப்பு இது. இந்த நிறுவனத்தின் நிதித் துறை தலைவர், மார்க்கெட்டிங் துறைத் தலைவர், விற்பனைத் துறைத் தலைவர் என முக்கியமான 11 பேர் தான் நிறுவனத்தை வழி நடத்துவார்கள்.
அந்த 11 பேர்
ஹிந்துஸ்தான் யுனிலிவரின் தலைமைக் குழுவை Unilever Leadership Executives (ULE) என்கிறார்கள். இந்த குழுவில் நிறுவனத்தின் 11 தலைவர்கள் இருப்பார்களாம். ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் முன்னாள் உலக தலைவர் ஹரீஷ் மன்வானி (Harish Manwani) இதில் இடம் பிடித்திருந்தார். இவருக்கு முன்பும் பல இந்தியர்கள் இந்த கெளரவமான 11 பேர் குழுவில் இடம் பிடித்திருக்கிறார்கள். ஆனால் ஒரே நேரத்தில் 3 இந்தியர்கள் இடம் பிடிப்பது இதுவே முதல் முறையாம்.
Nitin Paranjpe
இந்த 56 வயது இளைஞர் தான் ஹிந்துஸ்தான் யுனிலிவரின் உணவு மற்றும் புத்துணர்ச்சி சார்ந்த பொருட்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்துகிறார். இப்போது அவருக்கு முதன்மை செயல்பாட்டு அதிகாரியாக பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள். அதோடு இந்த 11 பேர் தலைமைக் குழுவிலும் இடம் கொடுத்திருக்கிறார்கள்.
Leena Nair
இவரோடு ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் முதன்மை மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரி லீனா நாயரும் இந்த 11 பேர் கொண்ட தலைவர்கள் குழுவில் இடம் பிடிக்கிறார்.
Sanjiv Mehta
அவரைத் தொடர்ந்து தற்போது ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவர் மற்ரும் நிர்வாக இயக்குநராக இருக்கும் சஞ்ஜீவ் மேத்தா ஹிந்துஸ்தான் யுனிலிவரின் தெற்காசிய நாடுகளுக்கும் தலைவராக நியமிக்கப் பட்டிருக்கிறாராம்.
தடம் பதிக்கும் இந்தியர்கள்..! யுனிலிவர் தலைவர்களாகும் மூன்று இந்தியர்கள்..!
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications