யார் இந்த Nitin Paranjpe..? ஏன் இவருக்கு யுனிலிவர் நிறுவனத்தில் உலக COO பதவி கொடுக்கப்பட்டது..?

யுனிலிவர் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கி நுகர்வோர் பொருட்களை வியாபாரம் செய்யும் நிறுவனம். உலகின் இரண்டாவது பெரிய FMCG நிறுவனம்.

ஹிந்துஸ்தான் யுனிலிவர். இந்தியாவின் FMCG - Fast Moving Consumer Goods -துறையில் வியாபாரம் செய்யும் நிறுவனம். துணிகளைத் துவைக்க பயனப்டுத்துக்கு Rin, surf Excel, தொடங்கி சாப்பிடும் Knorr, kissaan, bru, lipton, broke bond வரை பல பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறார்கள்.

இப்போது இந்த உலகின் இரண்டாவது பெரிய FMCG நிறுவனத்தின் உலக முதன்மை செயல் அதிகாரியாக (Chief Operating Officer) ஆக இந்தியாவைச் சேர்ந்த நிதின் பராஞ்ச்பே (Nitin Paranjpe) நியமிக்கப்பட்டிருக்கிறார்.

 இதற்கு முன்

இதற்கு முன்

யுனிலிவர் நிறுவனத்தின் உலக உணவு மற்றும் புத்துணர்ச்சி (Global Food and refreshment) துறையின் தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்தார். 2013-ம் ஆண்டில் இருந்து 2019 வரை யுனிலிவரின் உணவு பிசினஸை கவனித்து வந்தவர் அதற்கு முன் 2013-க்கு முன் ஹிந்துஸ்தான் யுனிலிவரின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் பதிகாரியாக இருந்து இந்திய வியாபாரங்களை கவனித்து வந்தார்.

 நிதினுக்கு ஏன் இந்த பதவி

நிதினுக்கு ஏன் இந்த பதவி

"இன்றைய போட்டி நிறைந்த சூழலில் அதுவும் பல தரப்பட்ட வாடிக்கையாளர்கள், பல்வேறு மீட்யாக்கள், பல சேனல்கள் நிறைந்திருக்கும் இந்த காலத்தில் யுனிலிவர் இதற்கு முன் செயல்பட்டதை விட இன்னும் வேகமாக செயல்பட வேண்டி இருக்கிறது. அதற்கு நிதின் பராஞ்பேவைப் போல FMCG சந்தையை நன்கு அறிந்த, ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் எங்களுக்குத் தேவை அதனால் தான் அவரை யுனிலிவர் தலைவர்கள் குழுவிலும், எனக்கு அடுத்த பதவியையும் கொடுத்திருக்கிறோம்" என பெருமைப் படுகிறார் யுனிலிவர் நிறுவனத்தின் சிஇஓஆலன் ஜோப்.

திறமை

திறமை

"ஒரு பிரச்னை வரும் போது தான் ஒருவரின் திறமை வெளிப்படும் என்பார்கள். அது போல நிதின் பராஞ்பே கேரளாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஹிந்துஸ்தான் யுனிலிவரை எதிர்த்து மக்கள் போராடத் தொடங்கினார்கள். அந்த நேரத்தைல் கலவரக் காரர்களையும், நிறுவனத்தை அவர் நடத்திய விதமே அவர் திறமைக்கு சாட்சி. அதோடு ஊழியர்களோடு ஊழியர்களாக உழைக்கும் நல்ல எண்ணம் கொண்டவர்" என நிதினின் புகழைப் பாடுகிறார் முன்னாள் யுனிலிவர் ஊழியர் சந்தீப் கோஷ்.

சாதனைகள்

சாதனைகள்

நிதின் யுனிலிவரின் உணவு மற்றும் புத்துணர்ச்சி துறையில் பதவி வகித்த போது தான் ஐஸ் க்ரீம், டீ என பல உணவு பொருட்களையும் தயாரிக்கத் தொடங்கியது. தன் துறையை சிறப்பாக விரிவாக்கம் செய்ததால், இன்று ஹிந்துஸ்தான் யுனிலிவருக்கே தனி விரிவாக்கம் கிடைத்தது போல இருக்கிறதாம்.

வியாபாரம்

வியாபாரம்

இன்று உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் தான் யுனிலிவரின் 40% பிசினஸ். யுனிலிவரின் உணவு மற்றும் புத்துணர்ச்சித் துறையின் வருவாய் கடந்த 2017-ம் ஆண்டை விட 2.22 பில்லியன் யுரோ குறைந்துவிட்டது. ஆனால் 2018-ம் ஆண்டில் யுனிலிவரின் உணவு மற்ரும் புத்துணர்ச்சி வியாபாரம் மூலம் செயல்பட்டு வருமானம் 2017-ம் ஆண்டில் சம்பாதித்த 8.85 பில்லியன் யூரோவை விட 2018-ல் 12.53 பில்லியன் யூரோவாக அதிகரித்ததாம். இதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்து யுனிலிவருக்கு வழி காட்டியவர் நிதின் பராஞ்பே தானாம்.

அதனால் தான் இவரை உலக யுனிலிவர் சிஓஓ-ஆக நியமித்திருக்கிறார்களாம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+