ஜியோவ தூக்குறோம்..! ஏர்டெல் கொடிய பறக்கவிடுறோம்..! சுனில் மித்தல் சபதம்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: செப்டம்பர் 2016-க்குப் பிறகு எங்கள் வியாபாரமே படுத்துவிட்டது. அதற்கு முன் ஆண்டுக்கு 7,000 - 8,000 கோடி ரூபாயை லாபமாக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ஏர்டெல் இப்போது பிசினஸை இழுத்து மூடிவிடும் நிலையில் இருக்கிறது.

 

இந்தியாவில் எந்த ஒரு டெலிகாம் ஆபரேட்டர்களிடமும் காசு இல்லை. அதற்கு காரணம் ஜியோ மிகக் குறைந்த விலைக்கு டெலிகாம் சேவைகளை வழங்குவது தான், என பல குற்றங்களையும், கதறல்களையும் வெட்ட வெளியில் வைப்பவர் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மித்தல்.

இப்போது ஜியோவை தில்லாக எதிர்த்து லாபத்தை சம்பாதித்துக் காட்டுகிறேன் என தொடை தட்டி சவால் விடும் அளவுக்கு வந்திருக்கிறார். எப்படி இந்த தைரியம் வந்தது..? என்ன செய்யப் போகிறார்..?

கார்களை அதிகம் பயன்படுத்தும் இந்திய நகரங்களில் சென்னைக்கு 4-வது இடம்..!

டிவி டிஷ் செட்டுகள்

டிவி டிஷ் செட்டுகள்

சுனில் மித்தல் கையில் எடுத்திருக்கும் விஷயம் DTH. ஏர்டெல் DTH மற்றும் டிஷ் டிவி DTH ஆகிய இரண்டு நிறுவனங்களையும் இணைத்து இந்தியாவின் DTH சேவையில் மிகப் பெரிய DTH நிறுவனமாக உருவெடுத்து ஜியோவை காலி செய்யப் போவதாக ஏர்டெல் நிறுவன அதிகாரிகள் வட்டத்தில் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

DTH-ல் ஜியோ

DTH-ல் ஜியோ

ஏற்கனவே இந்தியாவில் இரண்டு (Hathway cables and datacom, Den Networks) பெரிய கேபிள் நெவொர்க்குகள் நிறுவனங்களின் பங்குளை தன் கைக்குள் வைத்துக் கொண்டு இந்திய DTH சந்தையை வளைக்க துடித்துக் கொண்டிருக்கிறது ஜியோ. இந்த ஒரு விஷயத்திலேயே ஜியோ இந்திய DTH சந்தையையும் கூடிய விரைவில் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது இந்த தளத்தில் தான் ஏர்டெல் நேரடியாக ஜியோவோடு மோதப் போகிறது. அதுவும் தன் பரம்பரை எதிரி ஜியோவோடு.

பேச்சு வார்த்தை
 

பேச்சு வார்த்தை

இப்போது வரை ஏர்டெல் நிறுவனமும் டிஷ் டிவி நிறுவனமும் பேச்சளவில் தான் இரு நிறுவன இணைப்பைப் பற்றி பேசி வருகிறார்களாம். அடுத்த சில மாதங்களில் இந்த இரு நிறுவனங்களும் இணையும் பட்சத்தில் ஏர்டெல் நிறுவனத்துக்கு இது மிகப் பெரிய வெற்றியாகவும், ஜியோவுக்கு பெரிய பின்னடைவாகவும் இருக்குமாம்.

டாடா ஸ்கை

டாடா ஸ்கை

ஏர்டெல் டிஜிட்டல் DTH-ம், டிஷ் டிவி DTH-ம் இணையும் பட்சத்தில் 3.80 கோடி வாடிக்கையாளர்களோடு இந்தியாவின் மொத்த DTH சந்தையில் 61 சதவிகிதத்தை கைப்பற்றி விடும் ஏர்டெல். கடந்த மார்ச் 2018-ல் தான் டிஷ் டிவி, வீடியோகான் DTH நிறுவனத்தை தன்னோடு இணைத்துக் கொண்டது. அந்த இணைப்பின் போதே ஏர்டெல் DTH-ம் தன் ஏர்டெல் டிஜிட்டல் DTH சேவைகளை டாடா ஸ்கையிடம் விற்று விடலாம் என சில முறை முயற்சித்தார்கள். ஆனால் இரு நிறுவனங்களுக்கும் ஒத்து வராததால் இணைப்பைக் கை விட்டார்கள்.

ட்ராய் கணக்கு

ட்ராய் கணக்கு

டிராய் என்கிற அமைப்பு தான் இந்திய தகவல் தொழில்நுட்பத்தை நெறிமுறைப்படுகிறது. அந்த அமைப்பின் கணக்குப் படி செப்டம்பர் 2018-ல் டிஷ் டிவி நிறுவனத்துக்கு இந்திய DTH சந்தையில் 37%, டாடா ஸ்கை நிறுவனத்துக்கு இந்திய DTH சந்தையில் 27%, ஏர்டெல் டிஜிட்டல் நிறுவனத்துக்கு இந்திய DTH சந்தையில் 24% இருக்கிறதாம்.

டிஷ் டிவி வியாபார விவரம்

டிஷ் டிவி வியாபார விவரம்

டிஷ் டிவி நிறுவனத்துக்கு டிசம்பர் 2018 காலாண்டு நிலவரப்படி 2.6 கோடி வாடிக்கையாளர்களை வைத்துக் கொண்டு ஆண்டுக்கு 1,517 கோடி ரூபாய் வருவாய் சம்பாதித்து வருகிறார்களாம். ஒரு வாடிக்கையாளர் மூலம் சுமார் 200 ரூபாயை சம்பாதிக்கிறதாம் டிஷ் டிவி. டிஷ் டிவியின் பங்குகளில் 60.8% பங்குகளை அந்த நிறுவனத்தின் ப்ரொமோட்டர்கள் தான் இன்னும் வைத்திருக்கிறார்களாம்.

ஏர்டெல் வியாபார விவரம்

ஏர்டெல் வியாபார விவரம்

ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிசம்பர் 2018 காலாண்டில், 1.5 கோடி வாடிக்கையாளர்களை வைத்துக் கொண்டு 1033 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டுகிறார்களாம். ஏர்டெல் டிஜிட்டல் டிவி நிறுவனம் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து சுமாராக 231 ரூபாய் சம்பாதிக்கிறதாம்.

சுனில் மித்தல் நம்பிக்கை

சுனில் மித்தல் நம்பிக்கை

எப்படியோ ஜியோவை எதிர்த்து வியாபாரம் செய்ய, தன் ஏர்டெல் நிறுவனத்தை தாக்கு பிடிக்க வைக்க ஒரு நல்ல வருவாய் சோர்ஸ் கிடைத்துவிட்டதாகவே சுனில் மித்தல் நினைக்கிறாராம். எப்படியும் இதில் ஜியோவை ஓட ஓட விரட்டி தன் வியாபாரத்தை நிலை நாட்டி விடலாம் எனவும் டிஷ் டிவி அதிகாரிகளிடமும் பேசி வருகிறாராம். இதை எல்லாம் விட டெலிகாம் சந்தையில் ஜியோ எப்படி ஏர்டெல்லின் வியாபாரத்தை காலி செய்ததோ அதே போல இந்திய DTH சந்தையில் ஜியோவை காலி செய்ய தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறது ஏர்டெல்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

airtel will crack down jio in indian dth business space

airtel will crack down jio in indian dth business space
Story first published: Monday, March 18, 2019, 14:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X