மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுஸிகி தன் உற்பத்தியை சுமார் 27 சதவிகிதம் வரை குறைத்துக் கொண்டதாம்.
கடந்த மார்ச் 2018-ல் 1,72,000 வாகனங்களைத் தயாரித்தது மாருதி. ஆனால் இந்த மார்ச் 2019-ல் 1,26,000 கார்களை மட்டுமே உற்பத்தி செய்யப் போகிறதாம்.
திடீரென மாருதி சுஸிகி 26.8 சதவிகிதம் தன் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ள என்ன காரணம்..? ஏன் இந்த அதிரடி முடிவு..?
தேவை குறைவு
வரும் மே 2019 வரை முழுக்க முழுக்க தேர்தல் இருப்பதால், பெரும்பாலான பணம் தேர்தல் நேர செலவுகளிலேயேத் தான் இருக்கும். ஆகையினால் கார் விற்பனை அதிகமாக இருக்காது. அதோடு பொதுவாகவே கடந்த சில மாதங்களாக கார்களின் வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்கிற காரணங்களால் மாருதி தன் உற்பத்தியைக் குறைத்துக் கொள்கிறதாம்.
பிஎஸ் 4
வரும் ஏப்ரல் 01, 2020-ல் இருந்து பிஎஸ் 4 (Bharat Stage 4) எமிஷன் விதிமுறைகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்கக் கூடாது என்கிற சட்டத்தை கொண்டு வந்துவிட்டார்கள். இந்த சட்டத்தினாலும் கார் விற்பனை குறைவாகத் தான் இருக்கும் என்கிற காரணத்தாலும் தன் உற்பத்தியைக் குறைத்துக் கொள்கிறதாம்.
தேக்கம் வேண்டாம்
கடந்த ஏப்ரல் 01, 2017-க்குப் பின் பிஎஸ் 3 விதிமுறைகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்கக் கூடாது என்கிற சட்டத்தினால் ஜனவரி 2017 முதல் மார்ச் 31, 2017 வரை கையில் தேங்கி இருந்த வாகனங்களை தள்ளுபடி விலையில் விற்க வேண்டி இருந்தது. 2017 போல இந்த முறையும் விற்காத வாகனங்களை தேக்கி வைத்து தள்ளுபடி விலையில் விற்க தயாராக இல்லை மாருதி. எனவெ தன் உற்பத்தியை இன்றே பெரிய அளவில் குறைத்திருக்கிறது.
வட்டி, இன்ஷூரன்ஸ், எரிபொருள் விலை
மோட்டார் வாகன கடன்களுக்கான வங்கி வட்டி விகிதங்கள் உயர்வு, மோட்டார் வாகன இன்ஷூரன்ஸ் விலை ஏற்றம், எரிபொருள் விலை ஏற்றம் போன்ற விஷயங்களால் பொதுவாகவே வாகன விற்பனை மந்தமடித்திருக்கிறது. இதனால் கடந்த டிசம்பர் 2018-ல் தன் விற்பனை இலக்கை இரட்டைஇலக்கங்களில் இருந்து 8 சதவிகிதமாக குறைத்துக் கொண்டது மாருதி.
வியாபாரம்
2018 - 19 நிதி ஆண்டில் முதல் அரையாண்டில் மாருதி சுஸிகி கார்களின் விற்பனை 10.8% உயர்வைக் காட்டினாலும், டிசம்பர் 2018 காலாண்டில் கார்கள் விற்பனை கொஞ்சம் மந்தமாகவே இருந்தது. டிசம்பர் 2018 காலாண்டில் 17.21% நிகர லாபம் சரிவைக் காட்டியதும் குறிப்பிடத்தக்கது. டிசம்பர் காலாண்டில் மாருதி சுஸிகி 4.28 லட்சம் வாகனங்களை விற்றது. டிசம்பர் 2017-ல் 4.31 லட்சம் வாகனங்களை விற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications