டெல்லி: நிதி மற்றும் பொருளாதார பத்திரிகைகளில் முக்கியமான எகனாமிஸ்ட் பத்திரிகை இன்று ஒரு சர்வே வெளியிட்டிருக்கிறது.
எகனாமிஸ்ட் பத்திரிகையின் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு (Economist Intelligence Unit) உலக நாடுகளின் வாழ்வாதாரச் செலவுகள் சர்வே (Worldwide Cost Of Living Sruvey) என்கிற பெயரில் ஒரு சர்வே வெளியிட்டிருக்கிறார்கள்.
உலகம் முழுக்க 93 நாடுகளைச் சேர்ந்த 133 நகரங்களில் சுமார் 50,000 தனி நபர்களிடம் இந்த சர்வேக்களை நடத்தி தரவுகளைத் தொகுத்து வெளியிட்டு இருக்கிறது எகனாமிஸ்ட் பத்திரிகை.
கார்ப்பரேட் பயன்பாடு
இந்த சர்வேக்களை ஏனோ தானோ என எல்லாம் எடுக்கவில்லை. பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் ஊழியர்கள் பல நாடுகளுக்குச் செல்லும் போதும், அவர்கள் அங்கு தங்கி பணியாற்றும் போதும் அவர்களுக்கான வாழ்வாதாரச் செலவுகளைக் கணக்கிட இந்த சர்வேக்களைத் தான் பல எம்.என்.சி நிறுவனங்கள் பயன்படுத்துகிறார்களாம். அதனால் இந்த சர்வேக்கு நல்ல மரியாதை உண்டு.
தெற்காசியா
இந்த சர்வேயின் படி இந்தியாவின் பல நகரங்களில் மிகக் குறைந்த பணத்தில் நல்ல வாழ் வாதாரத்தோடு வாழ முடியும் எனச் சொல்லி இருக்கிறார்கள். பொதுவாகவே ஒவ்வொரு வருடமும் தெற்காசிய நாடுகளில் இருந்து ஒரு குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையிலான நகரங்கள் இந்த டாப் 10 சீப் நகரங்களில் இடம் பிடித்து விடுமாம்.
சீப் 10-ல் இந்தியா
இதில் வெனிசுலாவின் கராகஸ் நகரத்துக்கு தான் முதலிடம். இந்த டாப் 10 சீப் நகரங்களில் 5-வது இடம் பெங்களூரூக்கும், 6-வது இடம் பாகிஸ்தானின் கராச்சிக்கும், 9-வது இடம் சென்னைக்கும், 10-வது இடம் டெல்லிக்கும் கொடுத்திருக்கிறது எகனாமிஸ்ட். இந்த டாப் 10-ல் நான்கு நகரங்கள் தெற்காசிய நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காஸ்ட்லி 10
இதற்கு மாறாக காஸ்ட்லியான நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் - 1, பாரிஸ் - 2, ஹாங்காங் - 3, சுரிச் (Zurich) - 4, ஜெனீவா - 5 இடங்களைப் பிடித்திருக்கின்றன. அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்துக்கு இந்த டாப் 10-ல் 8-வது இடம், 10-வது இடம் தான் அமெரிக்காவின் கொண்டாட்ட நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ்.
More From GoodReturns

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications