கொல்கத்தா: இந்திய மொபைல் போன் சந்தை குறிப்பாக ஸ்பார்ட்போன் சந்தை வாரக்கடைசியில் வரும் திரைப் படங்களைப் போல மாறிவிட்டது.
ஒவ்வொரு வருடமும் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் புதிய ஸ்மார்ட் போன்கள் மூலம் முதலிடத்துக்கு சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒர் காலத்தில் இந்திய செல்போன் சந்தை என்றாலே நோக்கியா தான். அதன் பின் சோனி, மைkரோமேக்ஸ், சாம்சங் என மாறிக் கொண்டே வருகிறது. இப்போது ஷியாமி (Xiaomi) முதலிடத்தைப் பிடிக்க பல வழிகளில் வேலை பார்த்து வருகிறது. சாம்சங்கை காலி செய்வது தான் வேலை.
முடியவில்லை
இப்போது ஷியாமி இந்திய ஸ்மார்ட் போன்களின் நம்பர் 2 ஆக இருக்கிறது. மொத்த இந்திய சந்தையில் 17% ஷியாமி வசம் இருக்கிறது. ஆனால் சாம்சங் வசம் 24% இந்திய மொபைல் போன் சந்தை இருக்கிறது. மிக குறிப்பாக 2017-ம் ஆண்டில் இருந்து சான்சங்கின் வளர்ச்சி கொஞ்சம் மந்தமாகவே இருக்கிறது. ஆனால் ஷியாமியின் வளர்ச்சி இன்னும் நின்ற பாடில்லை. தொடர்ந்து புதிய மாடல்களை விலை குறைவாக உற்பத்தி செய்து சந்தையை ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கிறது.
முதலீடுகள்
இப்போது இந்திய சந்தைகளில் தன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், இன்னும் தன் சந்தையை இந்தியாவில் அதிகப்படுத்திக் கொள்ளவும் சுமார் 3500 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்திருக்கிறது. இதுவரை ஷியாமி செய்த முதலீடுகளிலேயே இது மிக அதிகமானது.
எப்படி
ஜனவரி 17, 2019 அன்று 1,500 கோடி ரூபாயையும், மார்ச் 01, 2019 அன்று 2,000 கோடி ரூபாயையும் இந்தியாவில் முதலீடு செய்திருக்கிறது. ஆனால் எதற்கு இந்த முதலீடுகள் என குறிப்பிட்டு தெளிவாக விளக்கவில்லை ஷியாமி. உலகிலேயே ஷியாமி தான் மிகப் பெரிய டெக்னாலஜி ஸ்டார்ட் அப் என்பதும் பலருக்கும் தெரியாத உண்மை.
இதுவாக இருக்கலாம்
ஷியாமி ஃப்ரிட்ஜ், வாசிங் மெஷின், ஏசி, லேப்டாப், குடிநீர் சுத்தீகரிப்பான் போன்ற பொருட்களைத் தயாரிக்க தான் இந்த முதலீடுகளை மேற் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறன. அதோடு ஷியாமி நிறுவனத்தின் சொந்த ஷோரூம்களையும் விரிவாக்கம் செய்யவும் இந்த முதலீடுகளைச் செய்திருக்கிறார்களாம். எது எப்படியோ, சாம்ங்சங்கை இந்திய மொபைல் சந்தையில் பின்னுக்கு தள்ளாமல் விடப் போவதில்லை என கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கிறதாம் ஷியாமி.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications