4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..! உறுதி செய்த NSSO..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தேசிய மாதிரி சர்வே அமைப்பு 2017 - 18-ம் ஆண்டுக்கான Periodic Labour Force Survey-யை வெளியிடும். 2017 - 18-ம் ஆண்டுக்கான Periodic Labour Force Survey-ன் படி 2017 - 18-ம் ஆண்டில் 28.6 கோடி ஆண்கள் மட்டுமே வேலை செய்கிறார்களாம்.

 

ஆனால் 1993 - 94-ம் ஆண்டில் 21.9 கோடியாக இருந்த ஆண்கள் வேலை வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. அ1993 - 94-ல் இருந்து கடந்த 2011 - 12-ம் ஆண்டு வரை தொடர்ந்து அதிகரித்து வந்த ஆண்களுக்கான வேலை வாய்ப்பு அதிகபட்சமாக 2011 - 12-ல் 30.4 கோடிக்கு வந்து நின்றது.

அதன் பின் கொஞ்சம் ஏற்றம் இறக்கம் என தடுமாறி இப்போது 2017 - 18-ம் ஆண்டில் வேலை வாய்ப்புகள் சரிந்து மொத்தம் 28.6 கோடி ஆண்கள் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். 2011 - 12-ம் ஆண்டு உடன் ஒப்பிடும் போது 1.8 கோடி ஆண்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோய் இருக்கிறது.

நேற்றே கைதான நீரவ் மோடி..! இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்..!

வேலை இழப்பு

வேலை இழப்பு

இந்தியாவில் நகர் புறங்களை விட கிராமபுறங்களில் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைந்திருக்கிறது. ஆண் பெண் என பிரிக்காமல் மொத்த வேலை வாய்ப்புகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்திய கிராம புறங்களில் 6.4% வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது. இந்திய நகர் புறங்களில் 4.7 சதவிகிதம் வேலைவாய்ப்பு சரிந்திருக்கிறது.

ஆண்களுக்கான வேலை

ஆண்களுக்கான வேலை

ஆண்களுக்கான வேலை வாய்ப்புகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் நகர் புறங்களில் 7.1 சதவிகிதமும், கிராம புறங்களில் 5.8 சதவிகிதமாகவும் பயமுறுத்துகிறது வேலையில்லா திண்டாட்டம். ஆக இந்த வேலை வாய்ப்பு தொடர்பான தரவுகள் எல்லாமே வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தான் காட்டுகிறது. அதோடு வெகு சில புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதையும் காட்டுகிறது.

இன்னும் வெளியாகவில்லை
 

இன்னும் வெளியாகவில்லை

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் அடுத்த வருடத்தின் ஜூன் மாதம் வரையிலான விவரங்களைத் தொகுத்து அடுத்த ஆண்டின் டிசம்பர் மாதத்துக்குள் இந்த Periodic Labour Force Survey விவரங்கள் வெளியிடுவார்கள். ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரையான தரவுகள் தொகுக்கப்பட்டு டிசம்பர் 2018-க்குள் தரவுகள் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் இப்போது வரை மத்திய அரசு இந்த Periodic Labour Force Survey 2017 - 18 தரவுகளை வெளியிட வில்லை. தேசிய மாதிரி சர்வே அமைப்பு வெளியிடும் அறிக்கையின் அடிப்படையில் 2011 - 12-ம் ஆண்டை விட 2017 - 18-ல் கிராம புறங்களில் 4.3 கோடி பேருக்கு வேலை பறி போய் இருக்கிறது. 2011 - 12-ம் ஆண்டை விட 2017 - 18-ல் நகர் புறங்களில் 0.4 கோடி பேருக்கு வேலை பறி போய் இருக்கிறது.

ஒட்டு மொத்தத்தில்

ஒட்டு மொத்தத்தில்

கிராம புறங்களிலும் வேலை பார்த்து வந்த பெண்களில் 68 சதவிகிதத்தினர் தங்கள் வேலையை இழந்திருக்கிறார்கள். நகர் புறங்களில் வேலை பார்த்து வந்த ஆண்களில் 96 சதவிகிதத்தினர் தங்கள் வேலையை இழந்திருக்கிறார்களாம். ஆக ஒட்டு மொத்தமாக இந்தியாவில் 2017 - 18-ம் ஆண்டில் நிலவரத்தை 2011 - 12-ம் ஆண்டுடன் வேலை வாய்ப்புகளை ஒப்பிட்டால் மொத்தம் 4.7 கோடி வேலை வாய்ப்புகள் குறைந்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

4.7 crore indian lost their jobs in 2018 comparing to 2012

4.7 crore indian lost their jobs in 2018 comparing to 2012
Story first published: Wednesday, March 20, 2019, 17:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X