30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துவாரகா: புராணங்களில் வரும் கண்ணன் மன்னனாக ஆட்சி புரிந்த துவாரகையில் இன்று 30 லட்சம் ரூபாய் பணத்தோடு ஏடிஎம் இயந்திரத்தையே பெயர்த்து எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்கள் திடுடர்கள்.

 

குஜராத் மாநிலத்தில் இருக்கு துவாரகா மவட்டத்தில், நவாடா மெட்ரோ ஸ்டேசனுக்கு அருகில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தை தான் திங்கட்கிழமை இரவு திருடி இருக்கிறார்கள்.

30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..!

திருடப்பட்ட ஏடிஎம் இயந்திரம் கார்ப்பரேஷன் வங்கிக்கு சொந்தமானது. கார்ப்பரேஷன் வங்கிக் கிளையின் மேலாளர் தன் புகாரில் 30 லட்சம் ரூபாய் நோட்டுக்கள் அந்த ஏடிஎம்-ல் இருந்ததாக புகார் கொடுத்திருக்கிறார்.

ஏடிஎம் திருட்டை வங்கி அதிகாரிகளோ, ஊழியர்களோ செய்யவில்லை. ஆனால் ஏடிஎம் இயந்திரத்தை பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர் மீது சந்தேகம் எழுதிருப்பதாக ஒரு விசாரணையை முடுக்கி விட்டு இருக்கிறார்கள்.

இரண்டு திருடர்கள் சிசிடிவி கேம்ராக்களில் க்ரீஸை தடவி விட்டு, கேமராவின் ஒயர்களை துண்டித்து விடுகிறார்கள். அதன் பிறகு தான் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்டு எடுத்துக் கொண்டு தப்பிக்கிறார்கள்.

4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..! உறுதி செய்த NSSO..!

ஏடிஎம் திருடப்படுவதற்கு முன் அந்த ஏடிஎம்-க்கு வந்து போனவர்களை வீடியோக்களில் பார்த்து இருவர் மீது சந்தேகம் எழுந்திருக்கிறதாம். ஆக காவலர்கள் சந்தேகப்படும் இருவர்களையும் தேடத் தொடங்கி இருக்கிறார்களாம்.

இந்த வழக்கை துவாரக காவல் நிலையத்தில் பதிவு செய்து விசாரித்து வருகிறார்களாம். இந்த வழக்கை விசாரிக்க இரண்டு தனிப் படைகளையும் அமைத்திருப்பதாக துவாரகா நகரத்தின் இணை ஆணையர் ஆண்டோ அல்போன்ஸ் சொல்லி இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

atm machine was stolen with 30 lakh rupees

atm machine was stolen with 30 lakh rupees
Story first published: Wednesday, March 20, 2019, 19:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X