உணவுப் பணவீக்கம் குறைந்து கொண்டே வருவதாக அரசு சொல்கிறது..! உண்மையா..?

டெல்லி: பொதுவாகவே அனைத்து இந்திய மாநிலங்களின் சராசரியைத் தான் நாம் நமக்கான நுகர்வோர் பணவீக்கமாக எடுத்துக் கொள்கிறோம். அதன் அடிப்படையில் பிப்ரவரி 2018 மற்றும் பிப்ரவரி 2019 மாற்றங்களைக் கொடுத்திருக்கிறோம். அதுவும் பிரத்யேகமாக உணவுப் பொருட்களுக்கான மாற்றங்களை மட்டும் கொடுத்திருக்கிறோம்.

உணவு மற்றும் பானங்கள் பிப்ரவரி 2018-ல் 3.38% ஆக இருந்தது இப்போது பிப்ரவரி 2019-ல் -0.07% ஆக குறைந்திருக்கிறது.

தானியங்கள் பிப்ரவரி 2018-ல் 2.1% ஆக இருந்தது இப்போது பிப்ரவரி 2019-ல் 1.32% ஆக குறைந்திருக்கிறது.

பொருட்கள் செட் 1

பொருட்கள் செட் 1

இறைச்சி மற்றும் மீன்களின் விலை பிப்ரவரி 2018-ல் 3.31% ஆக இருந்தது இப்போது பிப்ரவரி 2019-ல் 5.92% ஆக அதிகரிதிருக்கிறது. முட்டையின் விலை பிப்ரவரி 2018-ல் 8.51% ஆக இருந்தது இப்போது பிப்ரவரி 2019-ல் 0.86% ஆக குறைந்திருக்கிறது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விலை கடந்த பிப்ரவரி 2018-ல் 3.83% ஆக இருந்தது இப்போது பிப்ரவரி 2019-ல் 0.92% ஆக குறைந்திருக்கிறது.

பொருட்கள் செட் 2

பொருட்கள் செட் 2

எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருட்களின் விலை கடந்த பிப்ரவரி 2018-ல் 1.09% ஆக இருந்தது இப்போது பிப்ரவரி 2019-ல் 1.41% ஆக அதிகரித்திருக்கிறது. பழங்கள் விலை பிப்ரவரி 2018-ல் 4.80% ஆக இருந்தது இப்போது பிப்ரவரி 2019-ல் -4.62% ஆக குறைந்திருக்கிறது. காய்கறிகள் விலை பிப்ரவரி 2018-ல் 17.57% ஆக இருந்தது இப்போது பிப்ரவரி 2019-ல் -7.69% ஆக குறைந்திருக்கிறது.

பொருட்கள் செட் 3

பொருட்கள் செட் 3

பருப்பு வகைகளின் விலை பிப்ரவரி 2018-ல் -17.35% ஆக இருந்தது இப்போது பிப்ரவரி 2019-ல் -3.82% ஆக அதிகரித்திருக்கிறது. சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளின் விலை பிப்ரவரி 2018-ல் -0.26% ஆக இருந்தது இப்போது பிப்ரவரி 2019-ல் -6.92% ஆக குறைந்திருக்கிறது. மசாலா பொருட்களின் விலை பிப்ரவரி 2018-ல் -1.01% ஆக இருந்தது இப்போது பிப்ரவரி 2019-ல் 1.82% ஆக அதிகரித்திருக்கிறது.

பொருட்கள் செட் 4

பொருட்கள் செட் 4

ஆல்கஹால் கலக்காத பானங்களின் விலை பிப்ரவரி 2018-ல் 1.34% ஆக இருந்தது இப்போது பிப்ரவரி 2019-ல் 3.89% ஆக அதிகரித்திருக்கிறது. தயார் செய்யப்பட்ட உனவுகள், நொறுக்குத் தீனிகள் மற்றும் இனிப்பு வகைகளின் விலை பிப்ரவரி 2018-ல் 4.47% ஆக இருந்தது இப்போது பிப்ரவரி 2019-ல் 3.54% ஆக குறைந்திருக்கிறது.

உங்கள் ஊரில் குறைந்திருக்கிறதா..?

உங்கள் ஊரில் குறைந்திருக்கிறதா..?

இப்படி உங்கள் ஊர்களின் விலை குறைந்திருக்கிறதா எனப் பாருங்கள். உதாரணமாக பிப்ரவரி 2018-ல் ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை 100 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறீர்கள் என்றால் தோராயமாக இப்போது 113 ரூபாய்க்கு வியாபாரம் ஆக வேண்டும். அப்படி ஆனால் அரசு சொல்லும் இந்திய சராசரி நமக்கு பொருந்துகிறது என்று பொருள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+