டெல்லி: ஃபிட்ச் (Fitch) ரேட்டிங் நிறுவனம் இன்று (22 மார்ச் 2019) இந்தியாவுக்கான மொத்த பொருள் உற்பத்தியை, ஜிடிபியை 7 சதவிகிதத்தில் இருந்து 6.8 சதவிகிதமாக குறைத்திருக்கிறது.
இந்த கணிப்பு அடுத்த நிதி ஆண்டான 2019 - 20க்கு கணித்திருக்கிறதாம். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் தற்போது குறைந்திருப்பதால் தான் அடுத்த நிதி ஆண்டுக்கான வளர்ச்சியை 0.2 சதவிகிதம் குறைத்திருக்கிறார்களாம்.

2019 - 20-ம் ஆண்டில் 6.8 சதவிகித ஜிடிபி சாதித்தால் அடுத்த 2020 - 21-ம் வருடத்தில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.1 சதவிகிதமாக நிலையாக இருக்கும் எனவும் கணித்திருக்கிறார்கள் ஃபிட்ச் நிறுவனத்தினர்.
ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை அடுத்து வரும் ஆண்டுகளுக்கு மட்டும் இல்லை, 2018 - 19 நடப்பு நிதியாண்டுக்கும் 7.8 சதவிகிதத்தில் இருந்து 7.2 சதவிகிதமாக கடந்த டிசம்பர் 2018-ல் குறைத்தது கவனிக்கத்தக்கது.
டிசம்பர் 2018-ல் நடப்பு நிதி ஆண்டான 2018 - 19-ம் ஆண்டுக்கு மட்டும் இல்லாமல் அதற்கு அடுத்த 2019 - 20-ம் ஆண்டுக்கும் 7.3 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாக குறைந்தது. 2020 - 2021 நிதி ஆண்டுக்குக் கூட 7.3 சதவிகிதத்தில் இருந்து 7.1 சதவிகிதமாக குறைத்திருக்கிறது.
ஆக டிசம்பர் மாதம் ஒரு முறை நிதியாவில் ஜிடிபி குறையுமெனச் சொன்ன ஃபிட்ஸ் ரேட்டிங் அமைப்பு இப்போது மீண்டும் இந்தியாவின் ஜிடிபி டிசம்பரில் கணித்ததை விடவும் குறைந்து விடும் எனச் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications