Ola-வின் கேப் அக்ரிகேட்டார் உரிமம் ரத்து..! பதறும் ஓலா நிர்வாகம்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரூ: சமீபத்தில் தான் ஓலா தன் பைக் டாக்ஸி சேவைகளை பெங்களூரூவில் தொடங்கி முன்னோட்டம் பார்த்தது.

 

ஆனால் அதற்கு முறையாக அரசாங்கத்திடமோ அல்லது போக்குவரத்து துறைகளிடமோ எந்த ஒரு உரிமத்தையும் வாங்க வில்லை என கர்நாடக போக்குவரத்து 2019 மார்ச் 18-ம் தேதியே நோட்டீஸ் அனுப்பி இருக்கிறதாம்.

ஓலா நிறுவனத்துக்கு ஜூன் 2016-ம் ஆண்டில் இருந்து ஜூன் 2021-ம் ஆண்டு வரை டாக்ஸி (நான்கு சக்கர மோட்டார் வாகனம்) மட்டுமே வைத்து கேப் சர்வீஸ் நடத்த உரிமம் வழங்கி இருக்கிறார்களாம்.

இறங்கிய சந்தை, சந்தேகம் கொள்ளும் வர்த்தகர்கள்.. இறங்கிய சந்தை, சந்தேகம் கொள்ளும் வர்த்தகர்கள்..

நோட்டீஸ்

நோட்டீஸ்

இந்த நோட்டிஸ் கையில் கிடைத்து மூன்று நாட்களுக்குள் ஓலா நிறுவனத்துக்கு வழங்கி இருந்த கேப் சர்வீஸ் உரிமத்தை கர்நாடக போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்குமாறு சொல்லி இருக்கிறார்களாம்.

உறுதி

உறுதி

The Karnataka on Demand Transport Technology Aggregators Rules, 2016-ன் படி ஓலாவுக்கு டாக்ஸி சேவை வழங்கத் தான் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறதே ஒழிய, பைக்குகளில் டாக்ஸி சேவை வழங்க அனுமதி வழங்கப்படவில்லை என்பதை போக்குவரத்துத் துறை சார்ந்த அதிகாரிகளும் உறுதி செய்திருக்கிறார்கள்.

விதி மீறல்
 

விதி மீறல்

இது ஒரு முழுமையான விதி மீறல் என கர்நாடக அரசு வாதிடுகிறது. அதோடு நின்று விடாமல் ஓலா நிறுவனத்தில் பைக் டாக்ஸிகளாக இணைத்திருந்த 250-க்கும் மேற்பட்ட பைக்குகளை கர்நாடகா போக்குவரத்து காவலர்கள் பறிமுதல் செய்திருக்கிறார்களாம்.

ஆர்டிஓ

ஆர்டிஓ

ஒருவேளை ஓலா அரசின் வழிகாட்டுதல்களை மதிக்காமல் இன்னும் டாக்ஸி சேவைகளை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தால் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒவ்வொரு ஆர்டிஓ அலுவலகத்துக்கும் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து சொல்லி இருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ola taxi service license cancelled by karnataka government

ola taxi service license cancelled by karnataka government
Story first published: Friday, March 22, 2019, 18:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X