கோயம்புத்தூர்: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு வெளிநாட்டு கரன்ஸிகள் சிக்கி இருக்கின்றன. சுமார் 43.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்ரி இருக்கிறார்கள்.
கோயம்புத்தூரில், ஒண்டிப்புதூர் பாலம் அருகே, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த ஒருவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம், 35,000 டாலர் அமெரிக்கப் பணம், சிங்கப்பூர் பணம் 22,000 டாலர் சிங்கப்பூர் பணம், 10,000 யூரோ ஐரோப்பிய ஒன்றியப் பணம் இருப்பதையும், அதற்கு முறையான டாக்குமெண்டுகள் இல்லாததையும் விசாரித்து பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

அனைத்து வெளிநாட்டு கரன்ஸிகளையும் இன்றைய தேதிக்கு இந்திய ரூபாய் மதிப்பிட்டால் 43.5 லட்சம் ரூபாய் வருகிறதாம். ஹோண்டா ஆக்டீவாவில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்றும், சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் எபிக்ஸ் கேஷ் வேர்ல்டு மணி என்கிற வெளிநாட்டு கரன்ஸிகளை மாற்றிக் கொடுக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த 43.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்ஸிகளோடு அவர் கோவை விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்ததாகவும் பதிலளித்திருக்கிறார்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைதிருக்கிறார்கள். அந்தப் பணத்துக்கு நிறுவனத்தின் சார்பில் உரிய ஆவணங்கள் இருப்பதாகக் கூறிய ஜெயராம், பறக்கும் படை அதிகாரிகளிடம் ஆவணங்களையும் கொடுத்திருக்கிறார்.
பேப்பர்களில் திருப்தி அடையாத அதிகாரிகள், மொத்த தொகையையும் வருமான வரித்துறையிடம் கொடுத்திருக்கிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் என்பதால், அந்தப் பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக மாவட்ட அதிகாரிகளும் சொல்கிறார்கள்.
தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், வருமான வரித்துறையிடம் உரிய ஆவணங்கள் கொடுத்து பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் ஜெயராமனிடம் சொல்லி இருக்கிறார்களாம்.
More From GoodReturns

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடக்கும் வாக்குபதிவு!! வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ!!

ஸ்டாலின் Vs ஈபிஎஸ் Vs விஜய் Vs சீமான்: பெண்களுக்காக இவர்கள் முன் வைக்கும் வாக்குறுதிகள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications