பிரதமரின் 6000 ரூபாய் திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை..!

டெல்லி: பிரதமரின் கிஷான் சம்மன் நிதி(Pradhan Mantri Kisan Samman Nidhi) திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேர் அளவுக்குள் சொந்த விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.

இப்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால் இந்த Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தின் கீழ் புதிதாக விவசாயிகளின் பெயர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என தடை விதித்திருக்கிறது.

அதோடு இதுவரை எவ்வளவு விவசாயிகளின் பெயர்கள் Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தின் கீழ் பயனாளர்களாக பட்டியலிடப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே முதல் தவணையான 2,000 ரூபாயைக் கொடுக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறது தேர்தல் ஆணையம்.

வாக்கு போய்விடுமோ

வாக்கு போய்விடுமோ

தேர்தலை மனதில் வைத்து தான் பாஜக அரசு தன் இடைக்கால பட்ஜெட்டில் இந்த Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது ஏழை எளிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய 2,000 ரூபாயைக் கொடுக்கவில்லை என்றால் தேர்தல் வெற்றி பாதிக்கப்படுமோ என கலக்கத்தில் இருக்கிறது பாஜக.

Pradhan Mantri Kisan Samman Nidhi

Pradhan Mantri Kisan Samman Nidhi

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 6000 தருவதாகச் சொன்ன மோடி அரசு அதை மூன்று தவணைகளாக கொடுக்க திட்டமிட்டது. இப்போது Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தின் முதல் தவணையான 2,000 ரூபாயையே நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளூக்கு சென்று சேராத வண்ணம் இப்போது முட்டுக் கட்டை போட்டிருப்பதை பாஜகவினர் கொஞ்சம் வருத்தத்தோடு தான் பார்க்கிறார்களாம்.

முதல் செட்

முதல் செட்

இந்த திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இப்போது, மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இத்திட்டத்தில் புதிதாக விவசாயிகளின் பெயர்களை சேர்ப்பது தேர்தல் நடத்தை விதிமீறலாகும் என்பதால் புதிய பயனாளிகளைச் சேர்க்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.

மொத்தமே 2 கோடி பேர்

மொத்தமே 2 கோடி பேர்

இப்போது வரை முதல் முறையாக 1.01 கோடி பேருக்கு மட்டுமே பணத்தைக் கொடுத்திருக்கிறார்களாம். அதோடு இன்னொரு 1 கோடி விவசாயிகளின் பெயரைத் தான் மத்திய அரசு கையில் வைத்திருக்கிறதாம். ஆக மொத்தம் சுமார் 2.2 கோடி பேருக்கு மட்டுமே பணம் Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தின் கீழ் கொடுக்க முடியும் என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

பாக்கி தொகை

பாக்கி தொகை

இதற்கு ஒதுக்கிய 20,000 கோடி ருபாயில் சுமார் 5,000 கோடி ரூபாய் போக மீதமுள்ள 15,000 கோடி ரூபாய் அரசாங்க கஜானாக்களிலேயே இருக்க வேண்டி இருக்கும் எனவும் நிதி அமைச்சகம் சொல்லி இருக்கிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+