அமைப்பு சார்ந்த தொழில்கள் மூலம் 8.96 லட்சம் வேலை வாய்ப்புகள்..!

டெல்லி: பிஎஃப் செலுத்தும் அமைப்பு சார்ந்த வேலை வாய்ப்புகள் கடந்த ஜனவரி 2019-ல் 8.96 லட்சம் அதிகரித்திருக்கிறதாம். அதுவும் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறதாம்.

கடந்த ஏப்ரல் 2018-ல் இருந்து ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்குபவர்கள் செலுத்தும் பிஎஃப் தொகையினை அடிப்படையாக வைத்துக் கொண்டு இந்த வேலைவாய்ப்பு தரவுகளை வெளியிடுகிறார்கள்.

செப்டம்பர் 2017-ல் இருந்து மாதாமாதம் எவ்வளவு வேலை வாய்ப்புகள் அதிகம் உருவாகிறது என்கிற கணக்கை வெளிப்படையாக வெளியிட்டு வருகிறார்கள் EPFO அலுவலகம். கடந்த செப்டம்பர் 2017-ல் 2.75 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டனவாம்.

131% அதிகம்

131% அதிகம்

கடந்த ஜனவரி 2018-ம் ஆண்டை விட ஜனவரி 2019-ல் பிஎஃப் செலுத்தும் அமைப்பு சார்ந்த வேலை வாய்ப்புகள் 131 சதவிகிதம் அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிந்தது.

மொத்தம் 76.48 லட்சம்

மொத்தம் 76.48 லட்சம்

கடந்த செப்டம்பர் 2017-ல் இருந்து ஜனவரி 2019 வரையான காலத்தில் சுமார் 76.48 லட்சம் புதிய பிஎஃப் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கிறதாம். ஆக கடந்த 17 மாதங்களில் இத்தனை வேலை வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன.

வாழ்நாள் உச்சம்

வாழ்நாள் உச்சம்

அதே போல் ஜனவரி 2019-ல் மட்டும் 8.96 லட்சம் வேலைவாய்ப்புகள் ஒரே மாதத்தில் உருவாகி இருக்கின்றன. கடந்த செப்டம்பர் 2017-ல் இருந்து கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒரே மாதத்தில் அதிக வேலை வாய்ப்பு உருவாகி இருப்பது இந்த ஜனவரி 2019-ல் தானாம்.

தகிடு தத்தோம்

தகிடு தத்தோம்

கடந்த டிசம்பர் 2018-ல் முதலில் 7.16 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகச் சொன்ன பிஎஃப் அலுவலகம், மீண்டும் திருத்தம் செய்து 7.03 லட்சம் வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டதாகச் சொன்னார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+