மீண்டும் தேர்தல் விதி மீறலா..! ஏர் இந்தியா போர்டிங் பாஸில் மோடி படமா..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: முன்னாள் பஞ்சாப் மாநில டிஜிபி ஷஷிகாந்த் தன் சமூக வலைதளத்தில் தனக்கு வழங்கப்பட்ட ஏர் இந்தியா விமான போர்டிங் பாஸை படம் பிடித்து பதிவிட்டார்.

 

அந்த போர்டிங் பாஸில் Vibrant Gujarat-க்கு விளம்பரம் செய்வது போல, குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரின் படம் இருந்தது.

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த பின் எப்படி இரண்டு பெரிய தலைவர்களின் படத்தோடு போர்டிங் பாஸ்கள் கொடுக்கப்படலாம், ஏன் நாம் சொல்வதைக் கேட்காத தேர்தல் ஆணையத்துக்கு, நம் மக்களின் வரிப் பணத்தை வீணாக்குகிறோம் என தன் ட்விட்டர் பக்கத்திலேயே கேள்வி எழுப்பி இருந்தார்.

ஏர் இந்தியா பதில்

ஏர் இந்தியா பதில்

இந்த போர்டிங் பாஸ்கள் அனைத்துமே வைப்ரண்ட் குஜராத் காலத்திலேயே பிரிண்ட் செய்யப்பட்டது. அந்த விளம்பரத்தோடு வந்தவைகள் தான் இந்த ஃபோட்டோக்களும். இந்த விளம்பரங்கள் எல்லாமா மூன்றாம் நபரிடம் இருந்து வருபவைகள் என விளக்கமளித்திருக்கிறது.

எந்த சம்பந்தமும் இல்லை

எந்த சம்பந்தமும் இல்லை

எனவே இந்த போர்டிங் பாஸில் இந்திய அரசியல் வாதிகள் முகம் வந்ததற்கும் ஏர் இந்தியா நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் சொல்லி இருக்கிறார்கள். இந்த போர்டிங் பாஸ்கள் குஜராத் மாநிலத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் கொடுக்கப்படுகிறது எனவும் சொல்லி இருக்கிறார்கள்.

மோடி படத்துக்கு தடை

மோடி படத்துக்கு தடை

ஷஷி காந்த் எழுப்பிய பிரச்னைக்குப் பின்,மோடி, விஜய் ரூபானி படம் போட்ட போர்டிங் பாஸ்களை இனி எந்த வாடிக்கையாளருக்கும் கொடுக்கப்படாது என முடிவு செய்திருக்கிறார்களாம்.

ரயில் டிக்கேட்டுகள்
 

ரயில் டிக்கேட்டுகள்

கடந்த மார்ச் 20, 2019 அன்று தான் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தோடு வெளியான ரயில் டிக்கெட்டுகளை திரும்ப பெற்றுக் கொண்டது ஐஆர்சிடிசி. இந்த சம்பவத்தை முறையாக திரிணாமூல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர்.

மழுப்பல்கள்

மழுப்பல்கள்

ரயில்வே நிர்வாகமும் இப்போது ஏர் இந்தியா நிர்வாகம் சொன்னது போலவே தனக்கும் இந்த ரக ரயில் சீட்டுக்கள் முன்பே பிரிண்ட் செய்யப்பட்டு வந்தவைகளில் சில கட்டுகள் இப்போது பயன்பாட்டுக்கு வந்திருப்பதாகச் சொல்லி பிரச்னையில் இருந்து தப்பித்துக் கொண்டது. அதோடு மோடி படம் போட்ட டிக்கேட்டுகளையும் திரும்ப பெற்றுக் கொண்டது ரயில்வே நிர்வாகம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

air india accepted to roll back its modi face printed boarding pass

air india accepted to roll back its modi face printed boarding pass
Story first published: Monday, March 25, 2019, 18:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X