குன்னூரில் இடம் வாங்க போறீங்களா?.. அப்படீன்னா இதை முதல்ல படிச்சுட்டு போங்க

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குன்னூர்: அனல் அடிக்கும் வெயில் காலங்களில் அனைவரும் ஊட்டி, குன்னூர் போன்ற மலைப் பிரதேசங்களில் வந்து செல்ல நினைப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால் அதையும் தாண்டி சிலர் அங்கேயே சின்னதாய் ஒரு வீடு, சம்மர் விடுமுறைக்கு சென்று வர நல்லா இருக்குமே என்று எண்ணுவதுன்டு.

அப்படி எண்ணும், பலரும் தேர்தெடுக்கும் ஒரு இடம் தான் குன்னூர். ஊட்டி செல்லும் அனைவரும் குன்னூர் வழியாகத் தான் செல்வார்கள். இது மலைப் பிரதேசம் மட்டும் அல்ல. ஊட்டியில் இடத்தின் மதிப்பு அதிகம், செலவுகள் அதிகள் என்பதால் ஊட்டியில் தொழில் செய்பவர்கள் கூட குன்னூரில் வசிப்பது உண்டு.

குன்னூரில் இடம் வாங்க போறீங்களா?.. அப்படீன்னா இதை முதல்ல படிச்சுட்டு போங்க

ஒரு பில்லியன் டாலரில் 92 கிமீ மெக்ஸிகோ சுவருக்கு உதவும் பெண்டகன்..! மகிழ்ச்சியில் ட்ரம்ப்..! ஒரு பில்லியன் டாலரில் 92 கிமீ மெக்ஸிகோ சுவருக்கு உதவும் பெண்டகன்..! மகிழ்ச்சியில் ட்ரம்ப்..!

டீ, காபி, காய்கறிகள், காளான், வித விதமான அலங்கார பூ, பழ வகைகள் என பல வகையான கொட்டிக் கிடக்கும் தொழில் வாய்ப்புகள், இதுவும் கூட குன்னூரில் சிலர் இங்கு இடம் வாங்குவதற்கு காரணமாகும்.

குன்னூரிலிருந்து காட்டேரி 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மக்கள் வசிக்கும் பகுதியாகவும் உள்ளது. இந்த ஊர் குன்னூர் மற்றும் ஊட்டி செல்பவர்களுக்கு சவுகாரியமாகவும், இடத்தின் மதிப்பும் மற்ற நகரங்களை விட சற்றே குறைவுதான்.

உள்ளூர் மட்டும் அல்ல, வெளியூர் மக்களும் இங்கே நிறைய இடம் வாங்கி வருகிறார்கள். ஆனால் வாங்கும் யாரும் புதிதாக கட்டிடம் கட்டவோ, வேறு எதற்காகவும் அனுமதி தரப்படுவதில்லை.

விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஏனெனில் இந்த இடத்தின் அடியில் பூமிக்கடியில் தண்ணீரின் சக்தி மிக அதிகமாக உள்ளதால், மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுகிறது. இதனால் மக்களுக்கு பெரும் ஆபத்தே என்கிறது அரசு. எனினும் சில ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மக்களை ஏமாற்றி இங்கு இடத்தை விற்கின்றனர்.

குருவி சேர்ப்பது போல் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து வைத்து இடம் வாங்கும் போது அதை பார்த்து வாங்க வேண்டாமா? பொதுமக்கள் ஒரு இடத்தை வாங்கும்போது, அந்த இடத்தை பற்றி மழுவதும் தெரிந்து கொண்டு பின் வாங்க வேண்டும். தெரியாமல் வாங்கி விட்டு பின்னர் கஷ்டபடுவதை காட்டிலும் கண் முன்னே உள்ள ஆபத்தை தெரிந்து கொண்டு வாங்குங்கள் என்கிறார்கள் அங்குள்ள சமூக ஆர்வலர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Are you going to purchase plot in Coonoor

People who want to purchase plots in Coonoor should be aware of natural disasters in mind.
Story first published: Tuesday, March 26, 2019, 15:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X