சம்பளம் வருமா சார்..? 4 மாத சம்பளத்துக்காக காத்திருக்கும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள் சங்கம் ஸ்ஏட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் ரஜ்னேஷ் குமாரிடம் தங்களின் சம்பள பாக்கிகளை கொடுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

 

சமீபத்தில் தான் ஜெட் ஏர்வெஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து நரேஷ் கோயல் மற்றும் அவரின் மனைவி அனிதா கோயல் வெளியேற்றப்பட்டார்கள்.

அதன் பிறகு தான் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1500 கோடி ரூபாயை கடன் பத்திரங்களாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன் வந்திருக்கிறது. அதுவும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருக்கும் சொத்துக்களை அடாமானமாக எடுத்துக் கொண்டு தான் கடன் கொடுக்க முன் வந்திருக்கிறது.

இந்தியா வளர்கிறது எனக் காட்டிய இந்திய சந்தைகள்..! இந்தியா வளர்கிறது எனக் காட்டிய இந்திய சந்தைகள்..!

இயக்கினால் தான்

இயக்கினால் தான்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை இப்போது விற்றால் கூட வாங்கிய கடன்களுக்கான தொகையை மீட்க முடியாது. எனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விற்று வரும் பணத்தில் பங்கு போட்டுக் கொள்வதை விட இன்னும் கொஞ்சம் முதலீடு செய்து நிறுவனத்தை ஓட வைத்து வரும் லாபத்தில் கடன்களை அடைத்துக் கொள்வது தான் சரியாக இருக்கும் என கடன் கொடுத்தவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆக இந்த நிறுவனத்தை நல்ல விலைக்கு வாங்க ஒரு நல்ல தெளிவான, துறை அனுபவம் உள்ள நிறுவனங்கள் முன் வரும் வரை நிறுவனத்துக்கு கடன் கொடுத்து நடத்த முன் வந்திருக்கிறார்கள் ஜெட் ஏர்வேஸுக்கு கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்.

சம்பளம் எப்போது

சம்பளம் எப்போது

நரேஷ் கோயல் இருந்த வரை இதோ இப்போது கொடுக்கிறேன் அப்போது கொடுக்கிறேன் என இழுத்தடிக்கப்பட்டது ஊழியர்களுக்கான சம்பளப் பிரச்னை. ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள், பராமரிப்பு பொறியாளர்கள், என அனைவரும் சேர்ந்து வரும் ஏப்ரல் 01, 2019-ல் இருந்து எந்த விமானத்தையும் ஓட்ட மாட்டோம் என வெளிப்படையாக நரேஷ் கோயலை மிரட்டினார்கள்.

எஸ்பிஐ
 

எஸ்பிஐ

எஸ்பிஐ ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாகி ஆன பின் இப்போது மீண்டும் பணிவாக தங்கள் நான்கு மாத சம்பள பாக்கியை கொடுக்குமாறு கேட்டு வருகிறார்கள். அதோடு கிங் ஃபிஷ்ஷர் நிறுவனத்துக்கு நடந்தது போல இனி தங்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கும் நடக்காது என நம்பிக் கொண்டிருப்பதையும் வெளிப்படுத்தி கொஞ்சம் ஆசுவாசப்பட்டிருக்கிறார்களாம்.

உழைக்கிறோம் ஆனால் கூலி

உழைக்கிறோம் ஆனால் கூலி

எஸ்பிஐ-க்கு எங்கள் நான்கு மாத சம்பள பாக்கிகளைக் கொடுக்குமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். இந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மட்டும் அல்ல, தனிப்பட்ட முறையில் ஜெட் ஏஎர்வேஸ் பணியாளர்களும் பெரிய நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள். அதை எல்லாம் போக்க எவ்வளவு சீக்கிரம் சம்பளம் போட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போடுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

விளக்குங்கள்

விளக்குங்கள்

அதோடு எஸ்பிஐ நிர்வாகம் கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கு "ஜெட் ஏர்வேஸ் எப்படி மீண்டும் தன் பழைய இடத்தைப் பிடிக்கப் போகிறது..?" என்பதை விளக்கினால் இன்னும் நன்றாக இருக்கும். இப்படி ஊழியர்களை அழைத்துப் பேசினால் பணியாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை மீண்டும் விதைக்கப்படும். அதோடு இப்போது நிலவும் நிலையற்ற தன்மையும் மாறும் என தங்களுக்கு விளக்க மளிக்கவும் கேட்டிருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

jet airways staffs are waiting for their 4 month salaries due now requesting to sbi to clear their salary dues

jet airways staffs are waiting for their 4 month salaries due now requesting to sbi to clear their salary dues
Story first published: Tuesday, March 26, 2019, 17:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X