சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து மாற்றம் இல்லை. லோக்சபா தேர்தல் காலம் இது என்பதால் விலையில் கை வைக்காமல் உள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.
எண்ணெய் நிறுவனங்கள் முன்பெல்லாம் மாதம் இருமுறை விலையை நிர்ணயம் செய்து வந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முறை இம்முறை கைவிடப்பட்டது. தற்போது நாள்தோறும் டீசல், பெட்ரோல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. எரிபொருட்களின் விலை மாற்றத்தை பொருத்து இங்கு பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக பெரிய அளவில் மாற்றமே இல்லாமல் இருக்கிறது. டீசல் விலையிலும், பெட்ரோல் விலையிலும் பெரிய மாற்றங்கள் இல்லை. காரணம், லோக்சபா தேர்தல். நாடு முழுவதும் தேர்தல் ஜூரம் பற்றிக் கொண்டுள்ளது. மக்கள் மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளால் குறிப்பாக ஜிஎஸ்டி போன்றவற்றால் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
வேலையில்லாத் திண்டாட்டமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தலை விரித்தாடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விலைவாசி உயர்வு மறுபக்கம். இப்படி பல்வேறு எதிர் பிரச்சினைகள் அதிகமாக இருப்பதால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் அடக்கி வாசிப்பதாக கருதப்படுகிறது.
சென்னையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.67 ஆகவும், டீசல் விலை ரூ.70.26 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. மார்ச் 17ம் தேதி டீசல் விலை லிட்டருக்கு ரூ. 70.87 ஆக இருந்தது. பெட்ரோல் விலை 17ம் தேதி 75.52 ஆக இருந்தது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications