விஜய் மல்லையா சொல்வதைக் கேளுங்கள் “என் பணத்தை வைத்து ஜெட் ஏர்வேஸை காப்பாற்றுங்கள்”..!

டெல்லி: தன் பணத்தை எடுத்துக் கொண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காப்பாற்றும் படி தன் ட்விட்டர் பக்கத்தில் சொல்லி இருக்கிறார் விஜய் மல்லையா.

கடந்த மார்ச் 25, 2019-ல் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் இந்தியாவின் முன்னனி விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவில் இருந்து வெளியேறினார்கள். அதன் பின் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1,500 கோடி ரூபாயை கடன் பத்திரங்களாக முதலீடு செய்ய முன் வந்துள்ளதாம். இந்த கடன் பத்திரங்கள், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பெயரில் இருக்கும் சொத்துக்களுக்கு எதிராக தான் வழங்க இருக்கிறார்களாம்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் வாங்கிய கடனுக்கான வட்டி, விமானங்களுக்கான லீஸ் தொகை, விமான எரிபொருளுக்கு செலுத்த வேண்டிய பாக்கி, விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான சம்பள பாக்கி என பெரிய நிதி நெருக்கடியில் இருக்கிறது.

விஜய் மல்லையா

இப்போது நரேஷ் கோயல் இடம் இருந்து நிறுவனத்தை பிடுங்கிக் கொண்டு வங்கிகள் முதலீடு செய்து நிறுவனத்தை நடத்தத் தான் பார்க்கிறார்கள். அதையே தான் நானும் என் கிங் ஃபிஷ்ஷர் நிறுவனத்திலும் செய்ய 4000 கோடி ரூபாய் கடன் வாங்கினேன்.

கர்நாடகா உயர் நீதிமன்றத்திடம்

முன்பே கர்நாடக உயர் நீதிமன்றத்திடம் நான் வாங்கிய கடன் தொகைக்கு நிகரான சொத்துக்களை கொடுத்துவிட்டேன். 4000 கோடி ரூபாய் மட்டும். வட்டிக்கான தொகையைக் கொடுக்க வில்லை. இந்த பணத்தைக் கொண்டு நான் அரசு வங்கிகளில் வாங்கிய கடன் தொகை மற்றும் என் பிசினஸ் பாக்கிகளை எல்லாமே செட்டில் செய்துவிடலாம். ஏன் இன்னும் வங்கிகள் என் பணத்தை எடுத்துக் கொள்ளவில்லை. இந்த பணத்தை வைத்துக் கொண்டு ஜெட் ஏர்வேஸை நல்ல படியாக மீட்கலாம் எனவும் தன் ட்விட்டர் பக்கத்தில் சொல்லி இருக்கிறார்.

கஷ்ட காலம்

ஒரு காலத்தில் என் கிங் ஃபிஷ்ஷர் நிறுவனத்தை நடத்த முடியவில்லை அப்போது என் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க, அன்றாடம் விமான சேவைகளை நடத்த காசு இல்லாததால் என் நிறுவனத்தோடு என் நிறுவன ஊழியர்களையும் பாதுகாக்க 4000 கோடி ரூபாய் கடன் வாங்கினேன். என் நல்லெண்ணத்தை புரிந்து கொள்ளாமல், 4000 பேரின் வாழ்கையைப் புரிந்து கொள்ளாமல் என்னை எல்லா வழிகளிலும் காயப்படுத்திவிட்டீர்கள்.

வங்கிகளும் நான் செய்ததை செய்கிறது

வங்கிகளும் நான் செய்ததை செய்கிறது

இப்போது இந்தியாவின் தலை சிறந்த விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கிங் ஃபிஷ்ஷர் நிறுவனத்தைப் போன்றே பிரச்னையில் இருக்கிறது. இப்போது ஜெட் ஏர்வேஸின் தலைவர்களை எல்லாம் வெளியே அனுப்பிவிட்டு, கடன் கொடுத்தவர்கள் நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள். நான் கிங் ஃபிஷ்ஷருக்கு கடன் வாங்கியது போல இப்போது கடன் கொடுத்த வங்கிகளே மேலும் கடன் கொடுத்து நிறுவனத்தை நடத்தப் பார்க்கிறது.

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ் இந்தியாவின் தரமான விமான சேவை நிறுவனம். இந்த நிறுவனத்தில் இன்னும் நல்ல தரமான ஊழியர்கள் இருக்கிறார்கள். ஆனால் கனெக்டிவிட்டி மிக மோசமாக அடிவாங்கி இருக்கிறது. என மல்லையாவே தன் ட்விட்டில் தெரிவித்திருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+