லண்டன்: பஞ்சாப் நேஷனல் பேங்க் புகழ் வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டு வியாபாரிகள் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலரைப் பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த ஊழல் தொடர்பாக நீரவ் மோடி மீது இந்தியாவில் பல்வேறு விசாரணை அமைப்புகள் வழக்குகளைத் தொடுத்தன. இந்த வழக்குகளுக்கு ஒரு தீர்வு வருவதற்கு முன்பே, சிலரின் உதவியோடு நீரவ் மோடி இந்தியாவை விட்டே தப்பி விட்டார்.

அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு சட்டப் படி எடுத்தது. சமீபத்தில் லண்டனில் கடந்த மார்ச் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். அந்த கைதுக்கு வாரண்டைக் கூட கொடுத்தது லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம். மார்ச் 20, 2019 அன்று அதே வெஸ்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இப்பொது வெஸ்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கம் போல ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறாராம். ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்து சிறையில் அடைத்துவிட்டார்களாம்.
அவரது நீதிமன்றக் காவல், வரும் மார்ச் 29, 2019 அன்றோடு முடிகிறது. அன்றைய தினம் நீரவ் மோடியை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படுவாராம். அப்போது அவரது சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப் போவதாக நீரவ் மோடி தரப்பு முடிவு செய்திருக்கிறதாம்.
வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நீரவ் மோடியின் இரண்டாம் கட்ட விசாரணையை, விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்ட தலைமை நீதிபதி எம்மா ஆர்புத்நாட் நடத்த இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications