பாரீஸ்: பாரீசில் உள்ள ஒரு பூனையின் சொத்துமதிப்பு சுமார் ரூ.1,400 கோடியாகும். அந்த பூனை உலகின்பணக்கார விலங்காக கருதப்படுகிறது!!
நம்ம ஊருல எல்லாம் மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி ஆகியோரின் பெயரில் சொத்துக்கள் வாங்குவது உண்டு. ஆனால், ஒருவர்தனது செல்லப் பிராணியான பூனையின் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்கியுள்ளார்.

உலகின்மிகப் பெரிய ஆடை வடிவமைப்பாளர்களில்ஒருவராக திகழ்ந்தவர் ஜெர்மனியை சேர்ந்த கார்ல் லாகெர்பெல்ட். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வாழ்ந்து வந்த இவர் 85 வயதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார்.
கார்ல்லாகெர்பெல்ட் செல்லப்பிராணியாக பூனை ஒன்றை வளர்த்துவந்தார். அந்த பூனையின் பெயர்சவ்பெட். சவ்பெட்டின் மீது அளவு கடந்தபாசம் வைத்திருந்தார்.
கார்ல்லாகெர்பெல்ட் ஒரு பேட்டியின் போது, சட்டம் அனுமதித்தால் தனது செல்லப்பிராணி சவ்பெட்டைதிருமணம் செய்து கொள்வேன் என்றும், அதை கண்களின் வழியாக தாங்கள் இருவரும்உரையாடிக்கொள்வதாகவும் வேடிக்கையாக கூறினார்.
மேலும், சவ்பெட்டை தனது வாரிசாக அறிவித்தஅவர், தனது இறப்புக்கு பின்தன்னுடைய சொத்தில் ஒரு பகுதி பூனைக்குவழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில், கார்ல் லாகெர்பெல்ட் மறைவுக்குப் பின், இந்திய மதிப்பில்சுமார் ரூ.1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் சவ்பெட் பூனை பெயரில் உயில்எழுதப்பட்டிருப்பதாகவும், அதனை நிர்வகிக்க அறங்காவலர்களை நியமித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதன்மூலம் உலகிலேயே பணக்கார விலங்கு என்ற பெயரை 'சவ்பெட்' பூனை பெற்றுள்ளது. ரெம்ப ராசியான பூனையாஇருக்குப்பா? என்ன ராசியோ நட்சத்திரமோ அதிர்ஷ்ட காத்து இப்ப அதுபக்கம் வீசுது. ஆமா இப்ப பூனைக்கு அப்புறமா யாருக்கு இந்த சொத்து?????


Click it and Unblock the Notifications