டெல்லி: ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தற்போது அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். டெல்லியில் நடந்த 'தி தேர்டு பில்லர்' எனும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற போது செய்தியாளர்களிடம் பேசினார்.
நான் செய்து கொண்டிருக்கும் பணியில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் என்னுடைய திறனை பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தால், அதை பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் என ஒரு மாதிரி கமல் போல் பேசியுள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-க்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றால் ரகுராம் ராஜனை நிதியமைச்சராக்கப்படலாம் என பேச்சுக்கள் பலமாக எழுந்துள்ளது.
இதற்கிடையே ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் ஏழை குடும்பத்துக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக ரகுராம் ராஜனிடம் ஆலோசனை கேட்டோம் எனச் சொன்னது இன்னும் சந்தேகத்தை வலுவடையச் செய்திருக்கிறது.
நீங்கள் அடுத்த நிதி அமைச்சர் ஆவீர்களா என ரகுராம் ராஜனிடம் நேரடியாக கேட்டதற்கு "இதுதொடர்பாக எந்த ஒரு கட்சியும் என்னிடம் பேசவில்லை. இது இந்தியாவுக்கே ஒரு முக்கியமான தேர்தல். எனக்கு இந்திய பொருளாதாரத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் எனத் தோன்றுகிறது. யார் என் கருத்தைக் கேட்கத் தாயாரக இருந்தாலும் நான் கொண்டு வர நினைக்கும் மாற்றங்களை விரிவாக கொண்டு வருவேன்" என மீண்டும் மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்றைச் சொல்லி இருக்கிறார்.
ஆனால் இந்த பதிலில் இருந்து இந்தியாவின் நிதி ஆமைச்சராக பணியாற்ற அவருக்கு விருப்பம் இருப்பது கொஞ்சம் புரிய வருகிறது. ரகுராம் ராஜனின் ஆசையை யார் நிறைவேற்றுவார்கள் என காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications