நல்ல வேலை, குடிநீர், ஆரோக்கியம்.. இதுதாங்க வேண்டும்.. வாக்காளர்களின் சின்ன எதிர்பார்ப்பு!

டெல்லி: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 12 மா நிலங்களில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், மக்கள் அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இல்லை என்றும், ராணுவம் மற்றும் நீதித்துறை மீதே நம்பிக்கை உள்ளதாகவும், மேலும் வருங்காலத்தில்வேலையின்மை என்பது மிகுந்த பிரச்சனையாக தேசத்தில் இருக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பின் மூலம் தெரிகிறது.

எதிர்மறையான பதிலே?

எதிர்மறையான பதிலே?

இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 5 பேரில் ஒருவர், வேலையின்மை என்பது மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
தேசத்தில் அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இல்லாமல் மைனஸ் 55% பேர் எதிர்மறையாக மதிப்பளித்துள்ளனர்.

மக்களும் சமூகமும் கருத்துக்கணிப்பு.

மக்களும் சமூகமும் கருத்துக்கணிப்பு.

தேர்தல் 2019 நடக்கவிருக்கும் இன் ந் நேரத்தில் , மக்களும் சமுகமும் என்ற தலைப்பில் லோக் நிதி- சிஎஸ்டிஎஸ் மற்றும் அசிம் பிரேம்ஜி பல்கழைக் கழகம் இணைந்து இந்த கருத்து கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பில் அசாம், ஜம்மு காஷ்மீர், கேரளா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், தமிழகம், திரிபுரா, உத்திரபிரதேசம், உத்திரகான்ட், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய 12 மாநிலங்களில் இருந்து தலா 2000 பேர்களிடம் கருத்து கணிப்பு கேட்கப்பட்டது.
இந்த கருத்துகணிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரு முறை இதே போன்று 12 மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் தரவுகளையும் ஒருங்கிணைத்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது என்பது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்.

 

அப்படி என்னதான் அந்த கருத்துகணிப்பில் இருக்கு?

அப்படி என்னதான் அந்த கருத்துகணிப்பில் இருக்கு?

கருத்து கணிப்பில் பங்கேற்ற 20% பேர், வரும் காலத்தில் வேலையின்மை என்பதே மிகப் பெரும் பிரச்சனையாக இருக்கும், இதுவே பெரிய சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதில் 15% பேர் இந்த வேலையின்மையை போக்க அரசு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அதிகாரம் மிக்கவர்களால் வளர்ச்சி பாதிக்கும்.

கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 60% பேர், நாட்டின் வளர்ச்சி சிறுபான்மையினராலோ, அகதிகளாக புலம் பெயர்ந்து வருபவர்களாலே எந்த பாதிப்பும் இருக்காது எனவும், சக்திவாய்ந்த, அதிகாரம் மிக்க அரசியல்வாதிகளாலேயே வளர்ச்சி பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இக்கருத்து அதிகமாக காணப்படுகிறதாம்.

35- வயதிற்கும் கீழ் உள்ளோர்களில், 61% பேர் பணக்காரர்களாலும், மேல்மட்ட வகுப்பில் உள்ளவர்களாலும் தான் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். 35 வயதிற்கு மேற்பட்டோரு இதே கருத்தை முன் வைத்துள்ளது நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை தெரியப்படுத்தியுள்ளது,

 

ராணுவத்தின் மீது அதீத நம்பிக்கை!

ராணுவத்தின் மீது அதீத நம்பிக்கை!

நாட்டிலேயே நம்பிக்கை கொண்ட அமைப்புகளில் முதலிடம் ராணுவத்திற்கே என்று கூறியுள்ளனராம். கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 88% பேர் ராணுவத்தின் மீதே அதீத நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளனராம்.

நீதிமன்றத்திற்கு 2-வது இடம்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் 2-வது இடம் நீதி மன்றங்களுக்கே என்று ஒரு சாரார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 60% பேர் ராணுவத்திற்கு அடுத்தாற்போல் நப்புவது நீதிமன்றங்களையே என்கின்றனர்.

 

தரமான தரக் குறியீடு.

தரமான தரக் குறியீடு.

சரியான வேலை வாய்ப்பு (2.15/5), மருத்துவம் (2.30/5), குடி நீர் (2.52/5), சாலை வசதிக்கு 2.41/5, பொது போக்குவரத்துறை 2.58/5, விவசாயத்துக்கு தேவையான நீருக்கு 2.18/5, விவசாயக் கடன்களுக்கு 2.15/5, விவசாய உற்பத்தி பொருட்களுக்கு 2.23/5, விவசாயத்துக்கான மானியம் 2.06/5, சட்டம் மற்றும் உரிமைகள் 2.26/5, இந்த தரக் குறியீடுகள் 3க்கு இருக்குமேயானால் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், 3-க்கு மேற்பட்டவைகள் பரவாயில்லை எனலாம். ஆனால் மேல் குறிப்பிட்ட எதுவும் இதில் இல்லை என்பதே வருத்தமான செய்தியாகும்.

மேலும் அரசு பொதுத் துறைக்கு சம்பந்தமான நிலங்கள் மற்றும் ஏரிகளை சீரமைப்பதிலும் அரசு மிக மோசமாக செயல்படுகின்றன. சுற்றுலா துறை, வேலைவாய்ப்பு குறித்த செயல்முறை, விவசாய பொருட்களுக்கான உற்பத்தி விலை உள்ளிட்ட பல துறைகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

 

நெகட்டிவ் மார்க்!

நெகட்டிவ் மார்க்!

இவ்வாறாக பல வாறாக நம்பிக்கை வாக்கெடுப்பில் தரம் பி ரித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் மேல் 55% பேர் நம்பிக்கை இல்லை என்றும், இதுவே நிகர வாக்கெடுப்பின் படி கணக்கிட்டால், நெகடிவ் மார்க்கே என்கிறது இந்த கருத்துகணிப்பு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+