குசு விட்டதுக்கு ரூ.12 கோடி நஷ்ட ஈடா..? “குசு விட்டதெல்லாம் குற்றமாகாது” உச்ச நீதிமன்றம்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்திரேலியா: டேவிங் ஹிங்ஸ்ட் (David Hingst), இந்த 56 வயது பொறியாளர் தான் தன் சக ஊழியரான க்ரேக் ஷார்ட் (Greg Short) தன் அறையில் வந்து குசுவிட்டு தன்னை மன உளைச்சலுக்கு உள் ஆக்கிய காரணத்துக்காக வழக்கு தொடுத்தார்.

 

அதோடு தன் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக தான் வேலை செய்த கட்டுமான நிறுவனம் தனக்கு 1.8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 12.6 கோடி ரூபாய்) நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனவும் தன் வாதத்தில் கூறி இருக்கிறார்.

இந்த சுவாரஸ்யமான வழக்கு ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தின் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 25, 2019) விசாரணைக்கு வந்தது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் உயரப் போகும் டோல்கேட் கட்டணம்.. அதிர்ச்சியில் வாகனதாரிகள்

வழக்கு

வழக்கு

டேவிட் ஹிங்ஸ்ட் கீழ் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குக்கு "டேவிட் ஹிங்ஸ்ட் எந்த ஒரு மன உளைச்சலுக்கும் ஆளாக வில்லை" என தீர்ப்பு வந்தது. இந்த கீழ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஒரு தலைப்பட்சம்

ஒரு தலைப்பட்சம்

அதோடு கீழ் நீதிமன்றத்தில் விசாரணையும் ஒரு தலைப்பட்சமாகவே நடந்தது. நேர்மையான முறையில் விசாரிக்கப்படவில்லை எனவும் தன் வருத்தத்தை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார். அவ்வளவு ஏன் நீதிபதியே க்ரேக்-க்கு சாதகமாக நடந்து கொண்டதாகவே குற்றம் சாட்டுகிறார் டேவிட்.

டேவிட் வாதம்
 

டேவிட் வாதம்

"க்ரேக் ஒரு அடிப்படை நாகரீகம் தெரியாதவர். தினமும் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு முறையாவது என் அறைக்கு வந்து என் முகத்துக்கு அருகில் குசு விடுவார். அவர் விடும் குசு வேறு அதிக நாற்றமடிக்கும். நான் அமர்ந்து வேலை பார்க்கும் அறை வேறு கொஞ்சம் சிறியதாக இருக்கும். எந்த ஒரு ஜன்னல் கூட இருக்காது. எனவே இவர் விடும் குடுவின் நாற்றம் அடுத்த அரை மணி நேரத்துக்கு என்னை மன உளைச்சலிலேயே வைத்திருக்கும். அதனாலேயே அவரை நான் Mr Stinky என அழைப்பேன்" என புலம்புகிறார் டேவிட்.

என் மீது பொறாமை

என் மீது பொறாமை

மேலும் தொடர்ந்த டேவிட் ஹிங்ஸ்ட் "என் வேலை மீதும், என் மீதும் க்ரேக் ஷார்ட்டுக்கு எப்போதுமே பொறாமை இருந்ததுண்டு. என்னை இந்த நிறுவனத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்பதற்காகவே க்ரேக் இப்படிப்பட்ட தரக் குறைவான செயல்களில் ஈடுபட்டார். நான் கொஞ்சம் சென்சிட்டிவ் என்பதை அறிந்து கொண்டே இத்தகைய சதிச் செயல்களில் ஈடுபட்டு என்னை கொடுமை படுத்தினார்" என குமுறுகிறார் நம் டேவிட்.

வெறுப்பு

வெறுப்பு

மீண்டும் தொடர்ந்த டேவிட் "என் மீதான கோபம் ஒரு கட்டத்தில் வெறுப்பாக மாறி நான் என்ன செய்தாலும் தவறு எனச் சொல்லத் தொடங்கினார். க்ரேக் ஷார்ட்டுக்கு பொழுது போகவில்லை என்றால் என்னை போனில் அழைத்து சகட்டு மேனிக்கு திட்டுவார். என்னை முட்டாள், அறிவற்றவன் என எல்லாம் பொது இடத்திலும் அலுவலகத்திலுமே வைத்தே திட்டி இருக்கிறார்" என்றும் அப்பாவியாகச் சொல்கிறார் டேவிட்

க்ரேக் ஷார்ட் வாதம்

க்ரேக் ஷார்ட் வாதம்

நீதிமன்றத்தில் இதற்கு எதிர் வாதம் கொடுத்த க்ரேக் ஷார்ட் "நான் டேவிட் அருகில் சென்று குசு விட்டது தொடர்பாக என்னால் எதையும் நியாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தவறுதலாக மனித இயல்பாக வரும் போது நான் அடக்கிக் கொள்வதில்லை. அப்படி எனக்கு எதார்த்தமாக குசு வரும் போது நான் குசு விட்டிருக்கிறேன். ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் டேவிட்டை காயப்படுத்த வேண்டும், அவரின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்த வேண்டும் என்கிற உள் நோக்கத்தில் நான் குசுவிட்டு அவரை தொந்தரவுச் செய்ததில்லை" என கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்கிறார் க்ரேக் ஷார்ட்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்த டேவிட் ஹிங்ஸ்ட் மற்றும் க்ரேக் ஷார்ட் இருவருக்குமிடையிலான வழக்கு சில வித்தியாசமான வாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நடந்திருப்பதால் வரும் வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்குவதாக ஒத்தி வைத்திருக்கிறது ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: compensation claim
English summary

david hingst asked compensation of rs 12.6 crore from his company for psychological disturbance due to greg shorts fart

david hingst asked compensation of rs 12.6 crore from his company for psychological disturbance due to greg shorts fart
Story first published: Thursday, March 28, 2019, 16:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X