மல்லையாவிடம் இருந்து 1008 கோடி வசூல்..! சந்தோஷத்தில் எஸ்பிஐ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அமலாக்கத்துறை விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்று ஸ்டேட் பேங்க் ஆக் இந்தியா தலைமையிலான வங்கிகளுக்கு 1,008 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. விஜய் மல்லையா பதவி வகித்து நடத்தி வந்த யுனைடெட் பிரிவரீஸ் நிறுவன பங்குகளை விற்று தான் இந்த 1,008 கோடி ரூபாயை திரட்டி இருக்கிறார்களாம்.

யுனைடெட் ப்ரிவரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை இன்றைய தேதிக்கு (மார்ச் 28, 2019) வர்த்தக நேர முடிவில் 1376 ரூபாயாக இருக்கிறது. ஆக 74 லட்சம் * 7376 போட்டால் கூட 1016 கோடி ரூபாய் கிடைக்கிறது. எப்படியோ தரகுக் கட்டணங்கள் மற்றும் இன்ன பிற செலவுகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் 1,008 கோடி ரூபாய் என்பது நல்ல விலை தானாம்.

நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தான் யுனைடெட் ப்ரிவரீஸின் பங்குகளை விற்க அனுமதி கொடுத்தது. உடனடியாக விற்று இந்த 1,008 கோடி ரூபாயை திரட்டி விட்டார்களாம்.

சர்வதேச பணபறிமாற்ற மோசடி : எஸ்பிஐ உள்ளிட்ட 36 வங்கிகளுக்கு ரூ.71 கோடி ஆர்பிஐ அபராதம் சர்வதேச பணபறிமாற்ற மோசடி : எஸ்பிஐ உள்ளிட்ட 36 வங்கிகளுக்கு ரூ.71 கோடி ஆர்பிஐ அபராதம்

யெஸ் பேங்க்

யெஸ் பேங்க்

மல்லையா ஒரு கடன் தொகைக்காக தன்னுடைய பங்குகள் மற்றும் யுனைடெட் ப்ரிவரீஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் 74 லட்சம் யுனைடெட் ப்ரிவரீஸ் பங்குகளை யெஸ் பேங்கிடம் அடமானம் வைத்திருக்கும் செய்தி அமலாக்கத் துறைக்கு கிடைத்தது. அந்த யெஸ் பேங்க் கடனை கிட்டதட்ட முழுமையாக கட்டி முடிக்கும் சமயத்தில் தான் விவரம் கிடைத்திருக்கிறது

நாங்கள் செலுத்துகிறோம்

நாங்கள் செலுத்துகிறோம்

ஆக யெஸ் பேங்கில் பிரச்னை இல்லாமல் ஒரு பெரிய சொத்து இருப்பதை பார்த்த உடனேயே அமலாக்கத் துறை நீதிமன்றத்திடம் சொல்லி இந்த 74 லட்சம் பங்குகளையும் யாருக்கும் மாற்றம் செய்ய முடியாத படிக்கு நிறுத்திவிட்டார்கள்.

அமலாக்கத் துறையின் கீழ்

அமலாக்கத் துறையின் கீழ்

அமலாக்கத்துறையின் தொடர் அழுத்தத்தால் மல்லையா நவம்பர் 2016-ல் ஒரு பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார், அதன் பின் தான் 74 லட்சம் யுனைடெட் ப்ரிவரீஸ் பங்குகளும் அமலாக்கத் துறை பணச் சலவை சட்டத்தின் கீழ் கொண்டு வருகிறார்கள்.

விற்றுவிடு

விற்றுவிடு

மல்லையாவின் பங்குகள் மற்றும் யுனைடெட் ப்ரிவரீஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் பங்குகள் பணச் சலவைச் சட்டத்தின் கீழ் இணைத்த பின் யெஸ் பேங்கிடம் இருக்கும் இந்த பங்குகளை எஸ்பிஐ வங்கிக்கு மாற்றம் செய்யச் சொன்னது அமலாக்கத் துறை. யெஸ் பேங்க் மறுத்தது.

வழக்கு

வழக்கு

யெஸ் பேங்க் மறுத்த உடனேயே, ஆகஸ்ட் 13, 2018 அன்று ,பெங்களூரு கடன் தீர்பாயத்தில் இருந்து யெஸ் பேங்கின் சொத்துக்களையும் அமலாக்கத் துறையின் கீழ் இணைக்கச் சொல்லி உத்தரவு வருகிறது. அதன் பின் பிரவரி 27,2019 அன்று கர்நாடக உயர் நீதிமன்றம் யெஸ் பேங்கை தன்னிடம் இருக்கும் யுனைடெட் ப்ரிவரீஸ் பங்குகளை ஸ்டேட் பேங்குக்கு கொடுக்குமாறு உத்தரவிடுகிறது.

வழக்கு

வழக்கு

இந்த உத்தரவுக்கு பின்னும் யுனைடெட் ப்ரிவரீஸ் ஹோல்டிங் நிறுவனம் மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பங்குகளை விற்கக் கூடாது என வழக்கு தொடுக்கிறது. ஆனால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், யுனைடெட் ப்ரிவரீஸ் நிறுவன பங்குகளை விற்கலாம் என கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிடுகிறது கர்நாடக உயர் நீதிமன்றம். அதன் பின் தான் இந்த மொத்த யுனைடெட் ப்ரிவரீஸ் பங்குகளையும் விற்று 1,008 கோடி ரூபாயை திரட்டுகிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

enforcement directorate recovered 1008 crore from vijay mallya by selling his shares

enforcement directorate recovered 1008 crore from vijay mallya by selling his shares
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X