திருச்சி: திருச்சி அருகே மணப்பாறை மாடுகள் எந்த அளவில் புகழ்பெற்றது என்று " மணப்பாறை மாடுகட்டி, மாயாவரம் ஏரு பூட்டி" இந்த வரிகளில் நாம் அறிய முடியும். அப்படிப்பட்டமணப்பாறை மாட்டுச்சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை நடைபெறும்.
இந்த மாடுகள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில்இருந்தும்வியாபாரிகளும், விவாசாயிகளும் வாங்கிச் செல்வது வழக்கம். வண்டிமாடு, உழவு மாடு, ஜெர்சிமாடு. எருமை, கறவை மாடு, பூரணி, ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளிட்டபல வகையான மாடுகளும் எருமைகளும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 18-,ம் தேதி நாடாளுமன்றதேர்தல்நடக்கவிருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பதைதவிர்த்திரும்வகையில் தேர்தல் கமிஷன் அமைத்து கண்கானித்துவருகிறது. இதன் படி ஒருவர் ரூ.50,000 மேல் பணம் எடுத்துச் செல்லும் போது சரியான ஆவணம் இல்லையெனில் பறிமுதல்செய்யப்படும் என அறிவித்திருந்தது.
ஆந்திர, கர்நாடாகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வரும் மாட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், மணப்பாறைக்கு மாடு வாங்க வரும்போது அவர்கள் மாடு வாங்க வைத்திருக்கும் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் இதற்கு சரியான முறையில் ஆதாரமும் தர முடிவதில்லை என்பதால் அப்பணத்தை திரும்ப பெற வழியே இல்லையா? என்பதே அவர்களின் புலம்பலாக உள்ளது.
தரமானஒரு பசுமாடோ, கறவை மாடோ வாங்கவேண்டுமெனில் குறைந்தபட்சம் ரூ.70,000 மேல் வரும், ஆனால் ரூ.50,000க்கு மேல் பணத்தை எடுத்துவரும் போது அதற்கு சரியான ஆவணம் இல்லை எனில் பறக்கும் படையால் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது ஆவணத்திற்கு நாங்கள் எங்கே செல்வது என்கின்றனர் வியாபாரிகள்.
இதன் காரணமாக வழக்கமாக, ஒவ்வொரு வாரமும் ரூ.3 முதல் 7 கோடி வரையிலான மதிப்புள்ள மாடுகள் விற்பனையாகுமாம். ஆனால் , நடப்பு வாரத்தில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடிக்கு உள்ளேயே வர்த்தகமானதாம். காரணம் மாடுகள் வாங்ககொண்டுவரும் பணத்திற்கு எப்படிஆதாரம் காட்ட முடியும் என்கின்றன ர்வியாபாரிகளும், மக்களும். மேலும் மாடுகள் வாங்க வரும் வியாபாரிகளிடமும், விவசாயிகளிடமும் பணம் பறிமுதல் செய்வதை தேர்தல் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றனர்.


Click it and Unblock the Notifications