வாராக் கடன்.. திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க.. தீர்ப்பாயத்திடம் குவியும் மனுக்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வாராகடன் தொடர்பாக, திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்ககோரி இதுவரை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் இதுவரை 12,000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு திவால் சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின் கீழ் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன. இந்த சட்ட நிறுவனம் கடன்களை திரும்ப தராத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் விண்ணப்பிக்கின்றன. அவ்வாறு வரும் விண்ணப்பங்களை ஆராய்ந்து, பரிசீலிக்கப்பட்டு தீர்பாயம் அனுமதி தரும் பட்சத்தில் திவால் நடவடிக்கை துவங்கும்.

வாராக் கடன்.. திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க.. தீர்ப்பாயத்திடம் குவியும் மனுக்கள்

இதுகுறித்து மத்திய நிறுவன விவகாரங்கள் துறை செயல் இன் ஜெட்டிஸ்ரீனிவாஷ் கூறியதாவது, திவால் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இது வரை 12,000 விண்ணப்பங்கள் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் வந்துள்ளன. ஒரு சில விண்ணப்பங்கள் நிகர அளவிற்கு பைசூலாகின்றன. இந்த மொத்த விண்ணப்பங்களில் இஹுவரை வெளியில் மட்டும் 4,500 வழக்குகளுக்கும் மட்டும் தீர்வு காணப்பட்டுள்ளன. இதன் மூலம் 2லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

ரூ1,000 கோடியில் நம் Facebook Instagram-ஐ கண்காணிக்க தனி algorithm..! வருமான வரித்துறை அதிரடி..! ரூ1,000 கோடியில் நம் Facebook Instagram-ஐ கண்காணிக்க தனி algorithm..! வருமான வரித்துறை அதிரடி..!

இது தவிர 1500 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மேலும் 6000 விண்ணப்பங்கள் பரீசிலனையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது உணவு சாரா துறையின் கடன் 77லட்சம் கோடியாக உள்ளது. இதில் தொழில் மற்றும் சேவை துறையின் பங்கு முறையே 26 லட்சம், 21 லட்சம் கோடியாம். இரு துறைகளும் சேர்ந்து மொத்தம் 47 லட்சம் கோடிய் ரூபாயாகும். இது உணவு சாரா துறையின் மொத்த கடனில் 70% எனவும், எஞ்சிய 30% கடனுக்குதான் தற்போது தீர்வு காண வேண்டும் என்றும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

National company law tribunal: 12 cases filed

Cases under the code can be taken up only after approval from the tribunal, which has benches in different parts of the country.
Story first published: Thursday, March 28, 2019, 14:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X