வாஷிங்டன்: வாரா வாரம் அமெரிக்கா கச்சா எண்ணெய் இருப்பு குறித்த குறீயீடு ஒவ்வொரு வாரம் புதன் கிழமையன்று வெளியிடும். அதன் படி நேற்று (27-03- 2019) வெளியிடப்பட்ட அறிக்கையில். கடந்த வாரத்தை காட்டிலும் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கையிருப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது.
கடந்த வாரம் தேவையை விட - 1.1 மில்லியன் பேரல்கள் தேவை இருந்தது, ஆனால் நடப்பு வாரத்தில் தேவையை விட 2.8 மில்லியன் பேரல்கள் அதிகமாக இருப்பதாகவும் அந்த குறியீட்டின் மூலம் தெரிகிறது. ஆக நடப்பு வாரத்தில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் ஏற்றம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டாலும், அமெரிக்காவில் உற்பத்தி அதிகரிப்பாலும், அதேசமயம் சர்வதேச சந்தையில் தேவை குறைந்ததாலும் விலை சற்றே குறைந்தே வர்த்தகமாகி வருகிறது.
மேலும் அமெரிக்க பொருளாதாரத்தை அதிகரிக்கும் பொருட்டு பெடரல் ஓபன் மார்கெட் கமிட்டி நடப்பு ஆண்டில் ரெபோ விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று அறிவித்துள்ளது. இதனால் பெரிய அளவில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு ரூபாயின் மதிப்பில் பெரிய வீழ்ச்சி இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை வரும் வாரங்களில் பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், விலை சரிய வாய்பிருக்கிறது.
டாலரில் தற்போது 58.95 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இது 58 என்ற விலையை உடைக்கும் போது 56 டாலர் வரை சரிய வாய்பிருக்கிறது. மேலே சென்றாலும் 60 டாலருக்கு மேல் செல்ல வாய்ப்புகள் குறைவுதான் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
இந்திய கமாடிட்டி வர்த்தகத்தை பொறுத்தவரையில் 4080ஐ உடைத்தால் , 4041, 4007 என்ற நிலையிலும், மேலே சென்றால் ரூ.4120, 4164 என்ற நிலையிலும் வர்த்தகமாகலாம். இந்திய மார்கெட்டிலோ, அமெரிக்க வர்த்தகத்திலோ விலையில் மாற்றம் இருந்தாலும், இது பெட்ரோல் டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதே உண்மை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications