சீனாவிலிருந்து இறக்குமதியாகும் டயர்களுக்கு தனியாக விரி விதிக்க மத்திய அரசு முடிவு

டெல்லி: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லாரி, பேருந்துகளுக்கான டயர்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகத்துக்கு வர்த்தகத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இதில்கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியலாரி டயர் மற்றும் பேருந்துடயர் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்த்தகத் துறை அமைச்சகம் பரிந்துரையில் கூறியுள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் டயர்களுக்கு தனியாக விரி விதிக்க மத்திய அரசு முடிவு

சீனாவிலிருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்படும் டயர்களினால், இந்தியாவிலுள்ள டயர் நிறுவனங்கள் மிகவும் பாதிப்படைவதாக இந்திய டயர் தயாரிப்பாளர் கூட்டமைப்புக்கு அதிக புகார்கள் வருவதாக கூறியது. இந்த மிகை தடுப்பு வரிவிதிக்கப்படும் போது, அந்த வகையான டயர்கள் இறக்குமதி செய்யப்படும் டயர்களின் விலை, உள் நாட்டில்உற்பத்தி செய்யப்படும் டயர்களின் விலையை விட அதிகரிக்கும். இதனால் இறக்குமதியாளர்கள் அந்த வகையான டயர்களை இறக்குமதி செய்வது குறையும், இதனால் உள் நாட்டில்உற்பத்தி செய்யப்படும் டயர்களின் மதிப்பு அதிகரிக்கும்.

சீனாவில் டயர் உற்பத்தி நிறுவனங்களுக்கு அந்த நாட்டு அரசுஅதிக அளவில் மானியம் வழங்குகிறது. இதனால் தான் இந்தியாவுக்கு குறைந்த விலையில் அவர்களால் டயர்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது.

இதுபோன்று சீனாவிலிருந்து குவிக்கப்படும் பொருட்கள் மீது இந்த மிகை தடுப்பு வரியைத் போட்டால் , அப்பொருட்களின் விலை அதிகரிக்கும். இதனால் இந்திய பொருட்களுக்கான விலையும் அதிகரிக்கும், பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

கடந்த2014 - 2015 ஆம் ஆண்டில் 30,665 டன் டயர்கள் இறக்குமதிசெய்யப்பட்டது, அதுவேகடந்த 2016 - 2017ம் ஆண்டு 81,896 டன்டயர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சீனாவிலிருந்துஇறக்குமதி அதிகமாகசெய்யப்பட்டாலு, இந்தியாவிலிருந்து ஏற்றுமதிசெய்யப்படும் பொருட்கள் குறைவே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+