பான்: இப்போது ஜெர்மனியில் மிக பர பரப்பாகபேசப்படும் விஷயம் எது தெரியுமா? புஸ் வானம் வெடித்து சிதறியதுபோல, அரசல் புரசலாக பேசப்பட்டஒரு விஷயம் கடைசியில் உண்மையாகியுள்ளது.
கடந்த17-ம் தேதி ஜெர்மனியின் டாய்ச்ச வங்கியும் காமர்ஸ் பேங்க் இரண்டும் இணைவதாகஅறிவித்தன. அப்படி அவ்விரு வங்கிகளும் ஒருங்கிணைந்தால் அதன் மொத்த மதிப்பு என்ன தெரியுமா? 2 டிரில்லியன் டாலாராகும். இதை எண்ணும் போதே தலை சுற்றுகிறதுதல்லவா?

இருப்பினும் ஐரோப்பிய நாடுகளில் இந்த வங்கி சேவைக்கு 3-வது இடம் தான்,.முதல் இடத்தில் பிரிட்டனில் ஹெச்.எஸ்.பி.சி வங்கியும், இரண்டாவது இடத்தில் பிரான்சின் பி.என்.பி பாரிபஸ் வங்கியும் இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
2018-ம்ஆண்டின் நிலவரப்படி டாய்ச்ச பேங்க் ஊழியர்களின் எண்ணிக்கை 91,700, இந்த வங்கியின் மொத்த வருமானம் 25,316 பில்லியன் யூரோவாகும். இதன் இயக்க வருமானம்1330 பில்லியன் யூரோவாகும். இதுவே காமர்ஸ் வங்கியின்ஊழியர்களின் எண்ணிக்கை 49,174 மட்டுமே, அதன் இயக்க வருமானம் 1,245 பில்லியன் யூரோவாகும்.
ஜெர்மனியில் நிதியாண்டு என்பது ஜனவரி தொடங்கி டிசம்பரில் முடியும். அந்த வகையில் நான்காவது காலாண்டு முடிவுகளைப் பொறுத்தவரையில் டாய்ச்ச வங்கி 409 மில்லியன் யூரோவை நிகர இழப்பாக சந்தித்தது. இதுவே காமர்ஸ் வங்கி 2.1 பில்லியன் யூரோ வருவாயிலும் உள்ளன.


Click it and Unblock the Notifications