ஈரோடு: தேர்தல் நாள் நெருங்கி வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், அனைத்துக்கட்சிகளும் நீ நான் எனபோட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. அவ்வாறு பிரச்சாரம் செய்யும் கட்சிகள் அதற்கு தேவையான வாகனங்களைஅந்தந்த ஊர்களிலேயே எடுத்துச் செல்கின்றன.
தேர்தல் காலங்களில் சிறு சிறு தொழில்கள் மிகப் பெரிய அளவில் லாபம் பெறும். குறிப்பாக கட்சிக் கொடி தயாரிப்பாளர்கள், டெய்லர்கள் உள்ளிட்டோருக்கு தொழில் சிறப்பாக இருக்கும். மேலும் பந்தல் போடுவோர், மைக் செட் நடத்துவோர் ஆகியோரும் பிசியாக இருப்பார்கள்.
இதுதவிர வாட்டர் பாக்கெட் உள்ளிட்ட சிறு சிறு தொழில்களும் கூட சற்றே மேம்பட்டுக் காணப்படும். இந்த நிலையில் தற்போது கூட்டங்களுக்கு ஆள் சேர்க்க வாகனங்களை வாடகைக்கு எடுப்பது அதிகரித்துள்ளது. இதனால் வாகனங்களுக்கான வாடகையும் அதிகரித்துள்ளதாம்.
கட்சிகள் பிரச்சாரம்
நீலகிரி லோக்சபா தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தி.மு.க வேட்பாளர் ஆ ராசாவை ஆதரித்து, நடிகரும், ஸ்டாலினுடைய மகனுமாகிய உதய நிதி ஸ்டாலின்பிரச்சாரம் செய்து வருகிறார்.
வாகனங்களுக்கு கிராக்கி
இதற்காக பவானிசேகர், சத்தியமங்கலம் ஒன்றியம் மற்றும் நகரம் சார்பில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் ஆட்களை வேன்களில் ஏற்றி வந்தனர். இதேபோல அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்தும் வாடகைக்கு கார்கள் மற்றும் டாடா ஏஸ் வாகனங்களில்ஆட்களை ஏற்றி செல்வது என மக்களை திரட்டி ஏற்றி செல்வதற்காக வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் அரசியல் வாதிகளால், வண்டி உரிமையாளர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
குஷியில் ஓனர்கள்
இதற்கா கபுன்செய்புளியம்பட்டிக்கு அதிகளவில் வேன்களில் ஆட்களை திரட்டி வருகின்றனர். இதனால் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் வாகனங்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் வாகன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
வாகனங்கள் கிடைப்பதில்லை
இந்த வாடகையால் வாகனஓட்டிகள் சந்தோஷப்பட்டாலும், சாதாரண மக்கள் அத்தியாவசிய தேவைக்கு எடுக்கும் போது வாகனங்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் வாடகை அதிகமாக உள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.


Click it and Unblock the Notifications