சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வங்கிகளும் முழு நாள் செயல்படும், ஆர்பிஐ அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2018 - 2019 நிதியாண்டு முடிவடைவதையொட்டி, நாளை மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகள் அனைத்தும் முழுநாள் இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது, மார்ச் 30 மற்றும் மார்ச் 31 ஆகிய தேதிகளில் ஆன்லைன் பணபரிவார்த்தனையும் செய்யலாம். காசோலை பெறுதல் மற்றும் செலுத்துதல் உள்ளிட்டவையும் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மார்ச் 31 ஆம் தேதியுடன் 2018 - 2019 நிதியாண்டு முடிவடைவதையொட்டி, அன்றைய தினம், நாட்டில் அனைத்து நிறுவனங்களும் தங்களது வரவு செலவு கணக்கை முடிக்கும் சூழ்நிலையில் இருக்கும்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வங்கிகளும் முழு நாள் செயல்படும், ஆர்பிஐ அறிவிப்பு..!

இந்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்று வங்கிகள் இயங்காமல் இருந்தால் அது அரசுக்கும், நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது அன்று

ஜெட் ஏர்வேஸ் சம்பள பாக்கி: ஏப்ரல் 1 முதல் விமானங்கள் பறக்காது - எச்சரிக்கும் பைலட்டுகள்

செலவாகும் கணக்கை ஏப்ரல் 1 ஆம் தேதி தான் பதிவு செய்யவேண்டிய நிலை இருக்கும்.

எனவே, மார்ச் 31 ஆம் தேதி அன்று அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் இயங்க வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் மார்ச் 30 மற்றும் மார்ச் 31 ஆகிய தேதிகளில் ஆன்லைன் பணபரிவார்த்தனையும் செய்யலாம்.

வங்கிகளில் கவுண்டர்கள் வருகிற மார்ச் 30 ஆம் தேதி இரவு 8 மணி வரையிலும் மார்ச் 31 அன்று மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று காசோலை பெறுதல் மற்றும் செலுத்துதல் உள்ளிட்டவையும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank branches dealing with government business to remain open this Sunday: RBI

RBI directed banks to keep open their branches dealing with government business on the last day of the financial year 2018 -19 march 31st Sunday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X